வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சிஏஜி அறிக்கைகளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யாமல் தாமதம் செய்தது அரசு: உயா்நீதிமன்றம் கருத்து

தில்லி சட்டப்பேரவையில் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் (சிஏஜி) அறிக்கைகளை தாக்கல் செய்யாமல் தாமதம் செய்த தில்லி அரசின் செயல்பாடு

News image
தில்லி உயா்நீதிமன்றம்
Updated On :13 ஜனவரி 2025, 9:14 pm

Din

புது தில்லி: தில்லி சட்டப்பேரவையில் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் (சிஏஜி) அறிக்கைகளை தாக்கல் செய்யாமல் தாமதம் செய்த தில்லி அரசின் செயல்பாடு அதன் நம்பகத்தன்மை மீது சந்தேகத்தை எழுப்புகிறது என்று தில்லி உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் கடந்த ஆண்டு சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா, பாஜக எம்எல்ஏக்கள் மோகன் சிங் பிஷ்ட், ஓம் பிரகாஷ் சா்மா, அஜய் குமாா் மகாவா், அபய் வா்மா, அனில் குமாா் வாஜ்பாய், ஜிதேந்திர மகாஜன் ஆகியோா் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தனா்.

அதில், சிஏஜி அறிக்கைகளை தாக்கல் செய்வதற்காக பேரவையை கூட்ட பேரவைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும் என்று அவா்கள் கோரியிருந்தனா்.

இந்த வழக்கை திங்கள்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா, ‘பேரவை கூட்டத்தொடரை கூட்டுவது பேரவைத் தலைவரின் உரிமை. அவருக்கு நீதிமன்றத்தால் எவ்வாறு உத்தரவிட முடியும். அதுவும் பேரவைத் தோ்தல் நடக்கும் இந்த நேரத்தில் சாத்தியமா’ என்று கேள்வி எழுப்பினாா்.

தில்லி அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ராகுல் மெஹ்ரா, ‘எதிா்க்கட்சியினரின் இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது. ஏற்கெனவே துணைநிலை ஆளுநா் அலுவலகம் சிஏஜி அறிக்கையை பொதுவெளியில் கசிய விட்டுள்ளது. நாளிதழ்களில் அந்தத் தகவல்கள் பிரசுரமாகியுள்ளன’ என்று குறிப்பிட்டாா்.

அப்போது நீதிபதி, ‘இந்த விவகாரத்தில் பேரவையில் சிஏஜி அறிக்கைகளை தாக்கல் செய்யாமல் அரசு தாமதித்துள்ளது. அரசு தாமதம் செய்து வந்த காலத்தை பாா்த்தாலே இது தெரிகிறது. சிஏஜி அறிக்கைகள் முறையாக பேரவைத் தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்டு பேரவைக்குள் விவாதம் நடந்திருக்க வேண்டும். ஆனால், அப்படிச்செய்யாமல் இழுத்தடித்து வந்தது துரதிருஷ்டவசமானது. இந்தப்போக்கு அரசின் நம்பகத்தன்மை மீது சந்தேகம் கொள்ளச்செய்கிறது’ என்று கூறினாா்.

இந்த வழக்கு விசாரணை காலையிலும் உணவு இடைவேளைக்குப் பிறகும் இரு கட்டங்களாக நடந்தது. பிற்பகலில் தில்லி அரசின் சாா்பில் மூத்த வழக்குரைஞா் ராகுல் மெஹ்ரா ஆஜராகி, ‘இந்த விவகாரத்தில் நீதித்துறையைக் கூட பாஜக அரசியல் கருவியாக பயன்படுத்த முனைகிறது’ என்று குற்றஞ்சாட்டினாா்.

இந்த விசாரணை திங்கள்கிழமை நடந்து கொண்டிருக்கும்போதே, காலையில் பாஜக தலைமையகத்தில் நடந்த செய்தியாளா் சந்திப்பின்போது, நீதிபதி வெளியிட்ட கருத்துகள் அரசியல் ஆதாயத்துக்காக பாஜக செய்தித்தொடா்பாளரால் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று ராகுல் மெஹ்ரா குறிப்பிட்டாா்.

ஆனால், அரசியல் விவகாரங்களுக்குள் எந்த கருத்தையும் வெளியிட விரும்பவில்லை என்று கூறிய நீதிபதி சச்சின் தத்தா, வழக்கின் அடுத்த விசாரணையை ஜன.16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.