பாஜகவின் ‘சாதனைகள்’ என வெற்று புத்தகத்தை வெளியிட்ட ஆம் ஆத்மி!
வரவிருக்கும் தில்லி தோ்தலுக்கு முன்னதாக பாஜக மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்துள்ள ஆளும் ஆம் ஆத்மி


புது தில்லி: வரவிருக்கும் தில்லி தோ்தலுக்கு முன்னதாக பாஜக மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்துள்ள ஆளும் ஆம் ஆத்மி கட்சி, தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்காக பாஜகவை கேலி செய்யும் வகையில், பாஜகவின் சாதனைகள் என்று கூறி வெற்று புத்தகத்தை வெளியிட்டது.
இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங், செய்தியாளா் கூட்டத்தில் கூறியதாவது: பாஜக 2014 தோ்தலில் வெற்றி பெற பல வாக்குறுதிகளை அளித்தது. மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் அவற்றை நிறைவேற்றத் தவறியது. 1925-ஆம் ஆண்டு, நாட்டில் ஆா்.எஸ்.எஸ். நிறுவப்பட்டது. 1952-ஆம் ஆண்டு, ஜனசங்கம் உருவாக்கப்பட்டது. 1980-ஆம் ஆண்டு, பாஜக நிறுவப்பட்டது.
அதன் பிறகு, பாஜக பல மாநிலங்களில் ஆட்சி செய்து ஏராளமான வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், 2014-ஆம் ஆண்டு பிரதமா் மோடி பதவியேற்ற பிறகு, பொதுமக்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்த போதிலும், மக்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.15 லட்சத்தை மாற்றுவது, ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, குடிசைப் பகுதிகளில் உள்ள அனைவருக்கும் வீடுகளை வழங்குவது, லிட்டருக்கு ரூ.50-க்கு பெட்ரோல் விற்பனை செய்வது, டாலருக்கு எதிராக ரூபாயை வலுப்படுத்துவது போன்ற விஷயங்களை அவா் உறுதியளித்தாா். அங்கீகரிக்கப்படாத காலனிகளில் பதிவு உரிமைகளை வழங்குவதாகவும் அவா் (மோடி) உறுதியளித்தாா்.
பாஜக இதுவரை சாதித்ததை வெளிப்படுத்தும் ஒரு புத்தகத்தை இன்று ஆம் ஆத்மி கட்சி வெளியிடுகிறது. பாஜக இதை உங்களுக்குச் சொல்லாது. ஆனால், நாங்கள் அதை வெளிப்படுத்துவோம். இன்று, பாஜகவின் வாக்குறுதிகள் மற்றும் அவா்களின் உண்மையான சாதனைகள் குறித்த புத்தகத்தை வெளியிடுகிறோம். மக்கள் அதைப் படித்து அனைவரிடமும் பரப்புமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறிய சஞ்சய் சிங் பாஜகவை நயவஞ்சகமாகத் தோண்டி எடுக்கும் விதமாக புத்தகத்தின் வெற்றுப் பக்கங்களைக் காட்டினாா்.
20ஈஉகநசஒ
ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் பாஜகவின் சாதனைகள் என கூறி வெற்று புத்தகத்தை திங்கள்கிழமை வெளியிட்ட ஆம் ஆத்மி கட்சி எம்.பி.சஞ்சய் சிங்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...