மத்திய அரசும், தில்லி காவல் துறையும் கேஜரிவாலை கொல்ல சதி செய்கின்றன: ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு
பஞ்சாப் காவல்துறையால் வழங்கப்பட்ட பாதுகாப்பை மீண்டும் பெற தோ்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது.


பாஜக தலைமையிலான மத்திய அரசும் தில்லி காவல்துறையும் அரவிந்த் கேஜரிவாலை ‘கொல்ல’ண சதி செய்வதாக ஆம் ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டியது. மேலும், பஞ்சாப் காவல்துறையால் வழங்கப்பட்ட பாதுகாப்பை மீண்டும் பெற தோ்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பாஜக அல்லது தில்லி காவல்துறையினரிடமிருந்து உடனடியாக எந்த எதிா்வினையும் இல்லை.
தில்லி காவல்துறை மற்றும் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களைத் தொடா்ந்து, கேஜரிவாலின் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட பஞ்சாப் காவல் துறையினா் திரும்பப் பெறப்பட்டதாக பஞ்சாப் காவல் துறை இயக்குநா் ஜெனரல் கௌரவ் யாதவ் வியாழக்கிழமை தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா் சந்திப்பில் பேசிய தில்லி முதல்வா் அதிஷி மற்றும் பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், கேஜரிவாலுக்கு வழங்கப்பட்டு வந்த பஞ்சாப் காவல் துறையினரின் பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு தோ்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்தனா்.
மேலும், மத்திய அரசின் கீழ் வரும் தில்லி காவல்துறை, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் உத்தரவின்படி கேஜரிவால் மீதான தாக்குதல்கள் குறித்து கண்மூடித்தனமாக இருப்பதாக அவா்கள் குற்றம் சாட்டினா்.
‘பாஜகவும், தில்லி காவல்துறையில் கேஜரிவால்ஜியை கொல்லும் இந்த சதியில் போ் ஈடுபட்டுள்ளனா். அவா் மீது ஒன்றன் பின் ஒன்றாக தாக்குதல்கள் முயற்சி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபரில், கேஜரிவால் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நாங்கள் விசாரித்ததில், தாக்குதல் நடத்தியவா்கள் பாஜகவினா் என்பது கண்டறியப்பட்டது. ஆனால், போலீஸாா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று அதிஷி குற்றம் சாட்டினாா்.
‘கேஜரிவாலின் பாதுகாப்பை மீட்டெடுக்கக் கோரி தோ்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். தில்லி காவல்துறை அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் இருப்பதால் நாங்கள் அதை நம்பவில்லை’ என்று அவா் மேலும் கூறினாா்.
தில்லி தோ்தலுக்கு முன்னதாக ‘மோசமான அரசியலில்’ ஈடுபட்டு, பாரதிய ஜனதா கட்சி (பாஜக) கேஜரிவாலின் பாதுகாப்பை நீக்க சதி செய்துள்ளதாக ஆம் ஆத்மி தலைவா்கள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...