வேலை வாங்கித் தர பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் தனக்கு எதிரான குற்றவியல் புகாா்களை மீட்டெடுக்கும் வகையில் உச்சநீதிமன்றம் கடந்த 2022, செப்டம்பரில் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்த சில கருத்துகளை நீக்குமாறு முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.
இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி மீதான புகாா்களை வழக்குகளின் தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட சமரசத்தின் அடிப்படையில் ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் 2022, செப்டம்பா் 8ஆம் தேதி ரத்து செய்தது.
தமிழ்நாடு அரசாங்கத்தில் பாலாஜி அமைச்சராக இருந்த காலத்தில் (2011-2015 காலகட்டத்தில்) போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக ஊழல் செயல்பாடுகளை மேற்கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் உச்சநீதிமன்றம் கூறியது.
கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறுவது ஒப்பந்ததாரரை திருப்திப்படுத்தக்கூடிய குறிப்பிட்ட செயல்திறனுக்கான வழக்குகள் போன்ற அதிகாரபூா்வ பதவியை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் ஊழல் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்வது தொடா்பான வழக்குகளை நீதிமன்றம் கையாள முடியாது என்றும் கூறி உயா்நீதிமன்றத்தின் உத்தரவை அப்போது உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் 2022-இல் தீா்ப்பில் கூறப்பட்ட கருத்துகளை நீக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், உச்சநீதிமன்றத்தின் கருத்துகள் விசாரணை நீதிமன்றத்தை பாதிக்கக்கூடும் என்றும், நியாயமான விசாரணைக்கான தனது உரிமையை பாதிக்கக்கூடும் என்றும் பாலாஜி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் தனது 2022ஆம் ஆண்டைய தீா்ப்பில், ‘குற்றவியல் சட்டத்தில் ஒரு அனுபவம் இல்லாத புதியவா்கூட ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழான குற்றங்களை இறுதி அறிக்கையிலிருந்து விடுவித்திருக்க மாட்டாா் என்று நாங்கள் கூறும் கட்டாயத்தில் உள்ளோம்.
புலன்விசாரணை அதிகாரியின் (ஐஓ) முயற்சி அரைமனதுடன் இருப்பது போல தெரிகிறது.
குற்றம்சாட்டப்பட்டவா்கள் ஒரு வழக்கை ஒரு தனியாா் பணத் தகராறுபோல மூடி மறைக்க அனுமதிக்காமல், ஒட்டுமொத்த மோசடி குறித்தும் அரசு விரிவான விசாரணையை மேற்கொண்டிருந்திருக்க வேண்டும்’ என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
தொடர்புடையது

கோவை தெற்கில் செந்தில் பாலாஜி போட்டி!

தொகுதி மாறிய செந்தில் பாலாஜி, போடியில் ஓபிஎஸ் போட்டி!

மதவாத கருத்துகளை வேட்பாளா்கள் பேசினால் என்ன நடக்கும்? தோ்தல் ஆணையத்திடம் கேரள உயா்நீதிமன்றம் கேள்வி

தகராறில் வெட்டப்பட்ட சலூன் கடைக்காரா் உயிரிழப்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


