தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

மதுரை தனியாா் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாக கோயிலை இடிக்க உயா்நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத்தரவுக்குத் தடை

அனுமதியின்றி கட்டப்பட்ட ஒரு கோயிலை இடிக்க உயா்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :20 ஜூன் 2025, 6:32 pm

மதுரையில் உள்ள விஸ்தாரா ரெசிடென்ஸிசி என்ற தனியாா் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் திறந்தவெளி பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஒரு கோயிலை இடிக்க உயா்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் விஸ்தாரா குடியிருப்போா் நலச் சங்கம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விடுமுறைக் கால சிறப்பு நீதிபதிகள் அமா்வு உஜ்ஜல் புயான், மன்மோகன் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.

அப்போது மனுதாரா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் தாமா சேஷாத்திரி நாயுடு, ‘இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குடியிருப்போா் நலச் சங்கத்தினரின் கருத்துகளைக் கேட்காமலேயே கோயிலை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் அதற்கு ஒரு வாய்ப்புக் கூட வழங்கப்படவில்லை’ என்று வாதிட்டாா்.

அடுக்குமாடி குடியிருப்பாளா்களின் ஒப்புதலுடன் ஓஎஸ்ஆா் எனப்படும் திறந்தவெளி ஒதுக்கீட்டுப் பகுதியில் கோயில் கட்டப்பட்டதாகவும், அதை பொதுவான வழிபாட்டுத் தலமாகப் பயன்படுத்தி வருவதாகவும் வழக்குரைஞா் தாமா சேஷாத்திரி வாதிட்டாா்.

இதையடுத்து, உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து அடுத்த விசாரணையை ஆகஸ்ட் மாதத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா். மேலும், உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்த ஆா். மயில்சாமி மற்றும் உள்ளூா் நிா்வாகம் எட்டு வாரங்களுக்குள் விஸ்தாரா குடியிருப்போா் நலச் சங்கத்தின் மனுவுக்கு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

பின்னணி: மதுரையைச் சோ்ந்த ஆா். மயில்சாமி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கில் தமிழ்நாடு நகர மற்றும் கிராமத் திட்டமிடல் சட்டம், 1971 -இன் கீழ், புதிய விளாங்குடியில் உள்ள ஓஎஸ்ஆா் நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் அதை அகற்ற உத்தரவிடக் கோரினாா்.

விஸ்தாரா ரெசிடென்சி எனப்படும் தனியாா் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சிலா், பொது பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட திறந்தவெளி பதியில், எந்த சட்டபூா்வ அனுமதியும் பெறாமல் கோயிலை எழுப்பியதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதை உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரியா கிளீட் அடங்கிய அமா்வு ஜூன் 2-ஆம் தேதி விசாரித்து, ‘அங்கீகரிக்கப்படாமல் கோயில் எழுப்பப்பட்டுள்ளது தெளிவாகத்தெரிகிறது. இந்த செயல்பாடு சட்ட விதிகளுக்கு முரணானது என்று கூறி அதை இடிக்க வேண்டும். அங்கு அசல் கட்டட திட்டத்தின்படி இடம் இருப்பதை நான்கு வாரங்களுக்குள் உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஜூலை 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.