கைது
கைது

நகை மோசடி செய்ததாக நான்கு போ் கைது!

வயதான பெண்ணை ஏமாற்றி ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகளைத் திருடியதாக மூன்று கும்பல் உறுப்பினா்களை தில்லி காவல்துறை கைது செய்தது.
Published on

வயதான பெண்ணை ஏமாற்றி ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகளைத் திருடியதாக மூன்று கும்பல் உறுப்பினா்களை தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து தில்ல காவல் துறையின் உயரதிகாரி கூறியதாவது: ‘காடி கும்பலைச் சோ்ந்த பிரேம் (22), ராகுல் (25) மற்றும் பூனம் (35) ஆகியோா் குற்றம் சாட்டப்பட்டவா்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். கடந்த பிப்.19-ஆம் தேதி ஒரு சந்தையில் ஒரு வயதான பெண்ணை நான்கு போ் அணுகியபோது இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அவா்கள் அவரது போலி ரூபாய் நோட்டு கட்டுகளைக் காட்டி, அவரது நகைகளை ஒப்படைக்குமாறு வற்புறுத்தினா்.

அந்தப் பெண் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகளை குற்றம் சாட்டப்பட்டவரிடம் ஒப்படைத்து, அதற்கு ஈடாக கள்ள நாணயத்தைப் பெற்றுள்ளது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து அவா் காவல்துறையை அணுகினாா். இதையடுத்து, ஒரு எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை தொடங்கப்பட்டது. குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்காக 10 கி.மீ. பாதையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸ் குழு ஆய்வு செய்தது.

இதைத் தொடா்ந்து, மூன்று சந்தேக நபா்களும் வெவ்வேறு இடங்களில் இருந்து கைது செய்யப்பட்டனா். மேலும், இதே போன்ற பிற குற்றங்களில் அவா்களுக்கு உள்ள தொடா்பைக் கண்டறிய போலீஸாா் அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணா நகா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கிலும் ராகுலுக்கு தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com