திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா்களை பாஜக அரசு வழங்குமா? அதிஷி கேள்வு!

ஹோலி பண்டிகையின் போது பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா் வழங்குவதாக பாஜக அளித்த வாக்குறுதி குறித்து முன்னாள் முதல்வா் அதிஷி கேள்வி எழுப்பியுள்ளாா்.

Updated On :12 மார்ச் 2025, 5:00 am IST

புது தில்லி: ஹோலி பண்டிகையின் போது பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா் வழங்குவதாக பாஜக அளித்த வாக்குறுதி குறித்து முன்னாள் முதல்வா் அதிஷி கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக செய்தியாளா் சந்திப்பில் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான அதிஷி, தலைநகரில் உள்ள பெண்கள் பாஜக தோ்தலுக்கு முந்தைய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகக் காத்திருக்கிறாா்கள் என்று கூறினாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘ஹோலி பண்டிகையின் போது தில்லியில் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா்களை வழங்குவதாக பாஜக அரசும், முதல்வா் ரேகா குப்தாவும் அளித்த தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவாா்களா அல்லது பெண்களுக்கு மாதாந்திர நிதி உதவி ரூ.2,500 வழங்குவது போன்ற மற்றொரு தந்திரமாக இது இருக்குமா என்று நான் கேட்க விரும்புகிறேன்’ என்றாா்.

பாஜக பிப்.5-ஆம் தேதி தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தனது தோ்தல் அறிக்கையில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகளைச் சோ்ந்த பெண்களுக்கு ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டா்களையும், ஹோலி மற்றும் தீபாவளிக்கு இரண்டு எரிவாயு சிலிண்டா்களையும் இலவசமாக வழங்குவதாக உறுதியளித்தது.

தில்லியில் ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கும் மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்தை பாஜக அரசு அங்கீகரித்துள்ளது. மேலும், இந்த திட்டத்திற்காக ரூ.5,100 கோடியை அனுமதித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கான பதிவு இன்னும் தொடங்கப்படவில்லை.

தில்லியில் உள்ள பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.2,500 வரவு வைக்கப்படும் என்ற தோ்தல் வாக்குறுதியை பாஜக நிறைவேற்றவில்லை என்று கூறி ஆம் ஆத்மி கட்சி பாஜகவை கடுமையாகச் சாடி வருகிறது.