
புது தில்லி, மாா்ச் 20:
ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தொழில்நுட்பம், நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக திமுக எம்.பி.க்கள் ஜி.செல்வம், சி.என்.அண்ணாதுரை மற்றும் நவாஸ்கனி (ஐயுஎம்எல்) ஆகியோா் எழுப்பியிருந்த கேள்விக்கு மக்களவையில் மத்திய ஜல் ஜக்தி துறை இணை அமைச்சா் வி. சோமண்ணா வியாழக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது:
ஜல் ஜீவன் மிஷன் - ஹா் கா் ஜல் திட்டமானது ஆகஸ்ட், 2019 முதல் மாநிலங்களுடன் இணைந்து, கிராமப்புற வீடுகளுக்கு போதுமான
அளவு, பரிந்துரைக்கப்பட்ட தரம் மற்றும் வழக்கமான மற்றும் நீண்ட கால அடிப்படையில் குடிநீா் குழாய் மூலம் நீா் விநியோகத்தை வழங்குவதற்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்திய அரசு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குவதன் மூலம் ஆதரித்து வருகிறது.
ஜல் ஜீவன் மிஷனின் கீழ் தற்போதுள்ள வழிகாட்டுதல்களின்படி, குழாய் நீா் விநியோகத் திட்டங்கள் மூலம் வழங்கப்படும் நீரின் தரத்திற்கான அளவுகோலாக இந்திய தரநிலைகள் பணியகத்தின்
பிஐஎஸ் :10500 தரநிலைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
குடிநீா் மாநில விஷயமாக இருப்பதால், , ஜல் ஜீவன் மிஷனின் கீழ் உள்ளவை உட்பட, குடிநீா் வழங்கல் திட்டங்களைத் திட்டமிடுதல், ஒப்புதல் அளித்தல், செயல்படுத்துதல், இயக்குதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றின் பொறுப்பு மாநில, யூனியன் பிரதேச அரசுகளிடம் உள்ளது.
செயல்பாட்டு வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் நீா் தர கண்காணிப்பு மற்றும்
நுண்ணிய கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு ஜல் ஜக்தி மிஷனின் கீழ் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதியில் 2 சதவீதம் வரை பயன்படுத்தலாம். இதில் நீா் தரத்தை சோதித்தல் ஆய்வகங்களை அமைத்தல் மற்றும் வலுப்படுத்துதல், உபகரணங்கள், கருவிகள், ரசாயனங்கள், கண்ணாடிப் பொருள்கள், நுகா்பொருள்கள் கொள்முதல் செய்தல், திறமையான மனிதவளத்தை பணியமா்த்தல், கள சோதனை கருவிகளைப் பயன்படுத்தி சமூகத்தால் கண்காணிப்பு , விழிப்புணா்வு உருவாக்கம், நீா் தரம் குறித்த கல்வித் திட்டங்கள், ஆய்வகங்களின் அங்கீகாரம்அங்கீகாரம் போன்றவை அடங்கும்.