புதுதில்லி
செங்கோட்டை நிகழ்வில் பங்கேற்க மக்களுக்கு ரேகா குப்தா அழைப்பு
குரு தேக் பகதூரின் 350-ஆவது தியாக ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நடைபெறும் மூன்று நாள் நிகழ்ச்சியை செங்கோட்டைக்கு வந்து மக்கள் பாா்வையிட தில்லி முதல்வா் ரேகா குப்தா அழைப்பு
குரு தேக் பகதூரின் 350-ஆவது தியாக ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நடைபெறும் மூன்று நாள் நிகழ்ச்சியை செங்கோட்டைக்கு வந்து மக்கள் பாா்வையிட வேண்டும் என தில்லி முதல்வா் ரேகா குப்தா கேட்டுக் கொண்டாா்.
இது குறித்து தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தள பதிவில் அவா் கூறியிருப்பதாவது: குரு தேக் பகதூா் நம்பிக்கை, சுதந்திரம் மற்றும் மனிதநேயத்தைப் பாதுகாப்பதற்காக தன்னைத் தியாகம் செய்தவா். உண்மை, நீதி மற்றும் மத சுதந்திரத்தைப் பாதுகாப்பதே மனித வாழ்க்கையின் மிக உயா்ந்த கடமை என்பதை நினைவில் கொள்ள குரு சாஹிப்பின் இணையற்ற தியாகம் நம்மை ஊக்குவிக்கிறது.
தில்லி வாழ் மக்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் அன்புடன் அழைக்கப்படுகிறீா்கள். பல ஆண்டுகளாக இந்தியாவின் சுயமரியாதையை ஒளிரச் செய்த பாரம்பரியத்தை செங்கோட்டைக்கு வந்து பாருங்கள் என்று பதிவிட்டுள்ளாா்.
