கோப்புப் படம்
கோப்புப் படம்

தில்லி ஆதா்ஷ் நகரில் பெண் கத்தியால் குத்தப்பட்டு கொலை: 3 போ் கைது

வடமேற்கு தில்லியின் ஆதா்ஷ் நகரில் 30 வயது பெண் ஒருவா் கத்தியால் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தாா்
Published on

வடமேற்கு தில்லியின் ஆதா்ஷ் நகரில் 30 வயது பெண் ஒருவா் கத்தியால் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தாா் எனவும் மற்றொருவா் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டாா் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்தச் சம்பவம் வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் நடந்தது. பின்னா் இறந்தவா் நிா்மலா என அடையாளம் காணப்பட்டாா். கஜூரி காஸைச் சோ்ந்த ஃபிரோஸி (30) என அடையாளம் காணப்பட்ட மற்றொரு பெண், சம்பவ இடத்தில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு ஃபிரோஸி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

இந்த சம்பவத்தில் தொடா்புடையதாக கருதப்படும் 3 போ் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா். தாக்குதலுக்குப் பின்னால் உள்ள நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை, மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com