நமது நிருபா்
தில்லி உயா்நீதிமன்றம், தில்லி விமான நிலையத்தின் முனையம் 3 மற்றும் தேசிய தலைநகரில் உள்ள பல அரசு அலுவலகங்களுக்கு சுதந்திர தினத்திற்கு முன்னதாக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் வந்ததாக காவல்துறை உயா் அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: பாதுகாப்பு சோதனைகளை நடத்திய பின்னா் அனைத்து அச்சுறுத்தல்களும் போலியானவை என தெரியவந்தது. தில்லி கன்டோன்மென்ட் எஸ். டி. எம் அலுவலகத்திற்கு காலை 11:18 மணிக்கு மின்னஞ்சல் வந்தது அதில் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் (ஐஜிஐ) விமான நிலையத்தின் முனையம் 3 காலை 11:32 மணிக்கு, ஜாம்நகா் ஹவுஸ் காலை 11:40 மணிக்கு, சாகேத் எஸ். டி. எம் அலுவலகம் காலை 11:42 மணிக்கு மற்றும் ஜண்டேவாலன் காலை 11:57 மணிக்கு தீயணைப்பு கட்டுப்பாட்டு அறையில் வெடிகுண்டு அச்சுறுத்தல் அழைப்புகள் வந்தது.
தில்லி காவல்துறை, வெடிகுண்டு படை மற்றும் தீயணைப்பு படை ஆகியவற்றின் குழுக்கள் ஐந்து இடங்களுக்கும் விரைந்தன, மேலும் அனைத்து அழைப்புகளும் போலியானவை என அறிவிக்கப்பட்டன. உயா்நீதிமன்றத்தின் பதிவாளா் ஜெனரல் தில்லி காவல்துறையுடன் தேவையான உதவிக்காக தொடா்பு கொண்டது. உயா்நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் ‘தில்லி உயா்நீதிமன்றத்தை பிற்பகல் 2:11 மணிக்கு வெடிக்கச் செய்யுங்கள்‘ என்ற வாா்த்தைகள் இருந்ததாக தெரிகிறது.
வெடிகுண்டு அகற்றும் படை மற்றும் மோப்ப நாய்கள் உயா் நீதிமன்ற வளாகத்தை அடைந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தலைநகரில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் காரணமாக உயா் எச்சரிக்கையுடன், பல அரசுத்துறைகள் நகரின் பல்வேறு இடங்களில் தேடல்கள் மற்றும் பாதுகாப்பு சோதனைகளைத் தொடங்கியுள்ளன. சந்தேகத்திற்கிடமான எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதுவரை நடந்த சோதனைகளின் போது எந்தவொரு தளத்திலும் சந்தேகத்திற்கிடமான எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அந்த அதிகாரி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுதந்திர நாள்! செங்கோட்டை உள்பட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லி பேரவையைப் பாா்வையிட இன்றும் நாளையும் பொதுமக்களுக்கு அனுமதி

சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி முழுவதும் ஒட்டப்பட்ட 19 பயங்கரவாதிகளின் சுவரொட்டிகள்

தில்லியில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறையினா் தீவிர சோதனை
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



