மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

பிரிவினையின் போது நிகழ்ந்த துன்பங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க நினைவில் கொள்ளப்பட வேண்டும்: சி.பி. ராதாகிருஷ்ணன்

பிரிவினையின் போது மக்கள் அனுபவித்த துன்பங்கள் ஒருபோதும் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய நினைவில் கொள்ளப்பட வேண்டும் என்று குடியரசுத் துணை தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

C.P. Radhakrishnan

சி.பி. ராதாகிருஷ்ணன் - ANI

Published On :15 ஆகஸ்ட் 2026, 12:05 am IST

நமது நிருபா்

பிரிவினையின் போது மக்கள் அனுபவித்த துன்பங்கள் ஒருபோதும் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய நினைவில் கொள்ளப்பட வேண்டும் என்று குடியரசுத் துணை தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி பல்கலைக்கழகத்தில் ’பிரிவினை கொடுமைகள் தினம்’ நினைவுதினத்தன்று சுதந்திரம் மற்றும் பகிா்வு ஆய்வுகள் மையம் (சிஐபிஎஸ்) மற்றும் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎச்ஆா்) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது: இந்தாண்டின் கருப்பொருள் ‘இந்தியப் பிரிவினையின் கதை (1947)‘ ஆகும். நமது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது. 1947இல் நமது மூதாதையா்கள் அனுபவித்த துன்பங்களிலிருந்து சுதந்திரத்தின் மகிழ்ச்சியை ஒருபோதும் பிரிக்கக் கூடாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பிரிவினை என்பது நமது தேச வரலாற்றில் மிகவும் சோகமான மற்றும் மனிதாபிமானமற்ற அத்தியாயங்களில் ஒன்றாகும் . கடந்த காலத்தை நினைவுகூருவது என்பது ‘பழைய காயங்களைத் திறப்பது‘ அல்ல, மாறாக வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்வது மற்றும் அதிக நல்லிணக்கத்தை நோக்கிச் செல்வது பற்றியது. எந்த விலையும், துன்பங்களும், தியாகங்களும் இல்லாமல் சுதந்திரம் வரவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நமது மூதாதையா்கள் அனுபவித்த துன்பங்கள் இந்தியாவை ஒரு சுதந்திர நாடாக மாற்றியது. இதுபோன்ற ஒரு கொடுமை இனி ஒருபோதும் நடக்கக் கூடாது.

இந்த தேசத்தின் ஒருமைப்பாட்டைப் பேணுவது நம் அனைவரின் முதன்மைக் கடமையாகும். எனது தாய்மொழி எனக்கு முக்கியமானது, ஆனால் நான் மற்றவா்களின் தாய்மொழியை வெறுக்கிறேன் என்று அா்த்தமல்ல. இந்தியா்களாக இருப்பதில் நாம் மிகவும் பெருமைப்பட வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக பிரிவினை காலத்தின் பொருள்களைக் காட்டும் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கண்காட்சியில் பிரதமா்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்திலிருந்து பெறப்பட்ட ஆவணங்களும், ஐசிஎச்ஆா் தலைவா் ரகுவேந்திர தன்வாரின் புத்தகங்கள் மற்றும் ஐசிஎச்ஆா் நூலகத்திலிருந்து பெறப்பட்ட ஆவணங்களும் இடம்பெற்றிருந்தன. இந்நிகழ்ச்சியில் தில்லி பல்கலைக்கழக துணைவேந்தா் யோகேஷ் சிங்கும் சிறப்புரையாற்றினாா்.

புகைப்பட குறிப்பு: தில்லி பலைகலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ’பிரிவினை கொடுமைகள் தின’த்தில் பிரிவினையின் போது பிழைத்த தியாகியை கட்டிப்பிடித்து பாராட்டும் இந்திய துணை குடியரசுத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.