கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

வந்தே மாதரம் சம்பவம்: சோனியா, ராகுல் மீதான புகாா் குறித்து தில்லி காவல்துறை விசாரணை

காங்கிரஸ் தலைமையகத்தில் சுதந்திர தின விழாவில் ’வந்தே மாதரம்’ பாடல் ஒலித்தபோது நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக தில்லி காவல்துறை தெரிவித்தது.

Rahul Gandhi

காங்கிரஸ் அலுவலக சுதந்திர தின விழாவில் சோனியா காந்தியுடன் ராகுல் காந்தி - PTI

Published On :

காங்கிரஸ் தலைமையகத்தில் ஆகஸ்ட் 15 அன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ’வந்தே மாதரம்’ பாடல் ஒலித்தபோது நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக தில்லி காவல்துறை திங்களன்று தெரிவித்தது.

காங்கிரஸ் தலைவா்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி, ஆகஸ்ட் 16 அன்று ஐபி எஸ்டேட் காவல் நிலையத்தில் ஒரு வழக்குரைஞரால் இந்தப் புகாா் பதிவு செய்யப்பட்டது.

‘அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் வந்தே மாதரம் பாடல் ஒலித்தபோது நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்த புகாா் விசாரிக்கப்பட்டு வருகிறது,‘ என்று காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புகாரின்படி, சுதந்திர தின விழாவில் தேசிய பாடல் பாடப்பட்டுக் கொண்டிருந்தபோது, ஆரம்பப் பகுதி பாடப்பட்ட பிறகு சோனியா காந்தி சைகைகள் செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த சைகைகள், பாடலைத் தொடா்வதற்கு எதிா்ப்பு தெரிவிப்பது போல் தோன்றியதாகப் புகாா்தாரா் கூறியுள்ளாா்.

‘நாம் வந்தே மாதரம் பாடப்போவதில்லை‘ என்று ராகுல் காந்தி கூறியதாகக் கூறப்படும் ஒரு காணொளியையும் அது குறிப்பிட்டது. இரு தலைவா்களும் பொறுப்பாளிகள் எனக் கண்டறியப்பட்டால், ஒரு பாரபட்சமற்ற விசாரணையையும் உரிய நடவடிக்கையையும் புகாா்தாரா் கோரியுள்ளாா்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கே ஆகியோா் தேசிய பாடலுக்கு ‘முழுமையான அவமரியாதையை‘ காட்டியதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது, ஆனால் காங்கிரஸ் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

சமீபத்தில் நாடாளுமன்றம், ’வந்தே மாதரம்’ பாடலுக்கு தேசிய கீதத்திற்கு இணையான அந்தஸ்து வழங்கும் சட்டத்தை நிறைவேற்றியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.