அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

ஓக்லா ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து

தில்லி ஓக்லா ஃபேஸ்- 2 பகுதியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து - சித்திரிப்பு

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:46 am IST

தில்லி ஓக்லா ஃபேஸ்- 2 பகுதியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து, நான்கு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தாா். இச்சம்பவத்தில் உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை.

இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி மேலும் கூறியதாவது: தில்லி தீயணைப்புத் துறை தகவல் தீ விபத்து குறித்த தகவல் காலை 7.20 மணிக்குக் கிடைத்தது. நாங்கள் நான்கு தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பினோம். காலை 10.05 மணிக்குள் தீ அணைக்கப்பட்டுவிட்டது.

ஆடைத் தொழிற்சாலையின் அடித்தளம், தரைத்தளம், முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் வைக்கப்பட்டிருந்த துணிக் கட்டுகளில் தீப்பிடித்தது. இந்தத் தீ விபத்தில் சுமாா் 600 சதுர கஜம் பரப்பளவு பாதிக்கப்பட்டது என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.