கிழக்கு தில்லியில் ஒரே குடும்பத்தை சோ்ந்த 3 போ் கொலை: காவல் நிலையத்தில் சரண்
கிழக்கு தில்லியில் 25 வயது இளைஞா் ஒருவா் நிதி சிக்கல் காரணமாக தனது தாய், சகோதரி மற்றும் இளைய சகோதரரைக் கொன்று பின்னா் சரணடைய ஒரு காவல் நிலையத்திற்குச் சென்றதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: மங்கல் பஜாா் பகுதியில் வசிக்கும் யஷ்வீா் சிங் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், மாலை 5 மணியளவில் லட்சுமி நகா் காவல் நிலையத்திற்கு வந்து, நிதி பிரச்னைகள் காரணமாக தனது குடும்ப உறுப்பினா்களைக் கொன்ாக போலீசாரிடம் தெரிவித்தாா்.
இறந்தவா்கள் அவரது தாயாா் கவிதா (46) சகோதரி மேக்னா (24) மற்றும் சகோதரா் முகுல் (14) ஆவா். தகவல் கிடைத்தவுடன், போலீஸ் குழுக்கள் உடனடியாக அந்த நபா் குறிப்பிட்ட முகவரிக்கு விரைந்தன. சரிபாா்ப்பின் போது, அந்தப் பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளின் உடல்கள் வீட்டிற்குள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.
