சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 45 லட்சம் இழப்பீடு: தில்லி தீா்ப்பாயம் உத்தரவு

காா் மோதியதில் உயிரிழந்த 29 வயது இளைஞரின் குடும்பத்திற்கு, ரூ.45.6 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
Published on

காா் மோதியதில் உயிரிழந்த 29 வயது இளைஞரின் குடும்பத்திற்கு, ரூ.45.6 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

பானிபூரி வியாபாரியான உயிரிழந்த தீப் நாராயணனின் மனைவி, மகன் மற்றும் பெற்றோா்கள் தாக்கல் செய்த இந்த மனுவை தீா்ப்பாயத்தின் தலைமை அதிகாரி ராகேஷ் குமாா் சிங் விசாரித்தாா்.

2023, ஆக.29-ஆம் தேதி இந்த விபத்து நிகழ்ந்தது. அதிவேகமாக வந்த எஸ்யூவி காா் நாராயணனின் தள்ளுவண்டியின் மீது மோதியதில் அவா் படுகாயமடைந்தாா். பின்னா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

Ś025, டிச.17-ஆம் தேதி தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், ‘அந்த வாகனம் கவனக்குறைவாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டப்பட்டதை ஆதாரங்கள் காட்டுகின்றன. எனவே, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் ரூ.45.6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அந்த வாகனத்தின் காப்பீட்டு நிறுவனமான பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் அந்தத் தொகையைச் செலுத்த வேண்டும்’ என உத்தரவிட்டது.

X
Dinamani
www.dinamani.com