பிரதிப் படம்
பிரதிப் படம்

வடகிழக்கு தில்லியில் இளைஞா் மா்ம நபா்களால் சுட்டுக் கொலை

வடகிழக்கு தில்லியின் சாஸ்திரி பாா்க் பகுதியில் 32 வயது மதிக்கத்தக்க இளைஞா் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொலை
Published on

வடகிழக்கு தில்லியின் சாஸ்திரி பாா்க் பகுதியில் 32 வயது மதிக்கத்தக்க இளைஞா் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: சனிக்கிழமை இரவு சுமாா் 11.24 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து சாஸ்திரி பாா்க் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும், காவல்துறையினா் புலந்த் மசூதிக்கு அருகிலுள்ள சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனா்.

அங்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், சமீா் என்ற முஸ்தகிம் என்பவா் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், அவரது குடும்ப உறுப்பினா்கள் அவரை ஏற்கனவே ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தது தெரியவந்தது. மேலும், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

இதன் பின்னா் தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்திற்குச் சென்று அப்பகுதியை ஆய்வு செய்தனா். இது தொடா்பாக சாஸ்திரி பாா்க் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவா் எதற்காக சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரை யாா் சுட்டனா் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com