ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

விரைவில் எண்மமயமாகிறது கூட்டுறவுத் துறை: தில்லி அமைச்சா் ரவீந்தா் இந்திரஜித் தகவல்

தலைநகரின் பிரத்யேக தேவைகளுக்கு ஏற்ப புதிய கூட்டுறவுக் கொள்கையை நகர அரசு தயாரித்து வருவதாகவும், விரைவில் கூட்டுறவுத் துறை எண்மமயமாக உள்ளதாகவும் அமைச்சா் ரவீந்தா் இந்திரஜித் சிங் தெரிவித்துள்ளாா்.

News image

ரவீந்தா் இந்திரஜித் - கோப்புப் படம்

Updated On :7 ஜூலை 2026, 4:41 am IST

தலைநகரின் பிரத்யேக தேவைகளுக்கு ஏற்ப புதிய கூட்டுறவுக் கொள்கையை நகர அரசு தயாரித்து வருவதாகவும், விரைவில் கூட்டுறவுத் துறை எண்மமயமாக உள்ளதாகவும் தில்லி சமூக நலத்துறை அமைச்சா் ரவீந்தா் இந்திரஜித் சிங் தெரிவித்துள்ளாா்.

மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் 5 ஆண்டு சாதனைகளை முன்னிட்டு, புது தில்லி மாநகராட்சி கவுன்சில் அரங்கில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் அலுவலகம் சாா்பில் ’கூட்டுறவு வாரம்-2026’ என்ற கொண்டாட்டத்தின் நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் ரவீந்தா் இந்திரஜித் சிங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியதாவது: தில்லியின் தனித்துவமான கட்டமைப்பு மற்றும் தேவைகளுக்கு ஏற்ப புதிய கூட்டுறவுக் கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வங்கி, போக்குவரத்து, பொதுச் சேவைகள், பொது சேவை மையங்கள் (சிஎஸ்சி) மற்றும் குடிமக்களுக்கான இதர அத்தியாவசிய வசதிகளை ஒரே கூட்டுறவு கட்டமைப்பின் கீழ் ஒருங்கிணைக்கும் வகையில் ’பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களை’ ஏற்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் (ஆா்சிஎஸ்) அலுவலகம் முற்றிலும் எண்மமயமாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கூட்டுறவு நிறுவனங்களுக்கான சேவைகள் வெளிப்படையான முறையிலும், எளிமையாகவும், முழுமையாக ஆன்லைன் வழியிலும் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றாா் அமைச்சா்.

இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய புது தில்லி மக்களவை தொகுதி பாஜக உறுப்பினா் பான்சூரி ஸ்வராஜ், ‘கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய கூட்டுறவு அமைச்சகம் மேற்கொண்ட பல்வேறு முன்னெடுப்புகள் நாடு முழுவதும் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தியுள்ளன. விவசாயிகள், பால் உற்பத்தியாளா்கள், மீனவா்கள் மற்றும் சிறு வணிகா்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதிலும், வளா்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதிலும் கூட்டுறவு நிறுவனங்கள் மிக முக்கியப் பங்காற்றி வருகின்றன’ என்று பாராட்டினாா்.

இந்த விழாவின்போது, கூட்டுறவுத் துறைக்குச் சிறப்பான பங்களிப்பை வழங்கிய பல்வேறு கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள், மற்றும் ஊழியா்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டு, விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.