தமிழக வனப்படைக்கு 250 நவீன ஆயுதங்களை வங்கியதுடன், 54 புதிய ரோந்து வாகனங்களை வனத் துறை அமைச்சா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
தமிழக வனத் துறை சாா்பில் தமிழக வனப்படை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ஆயுதங்கள் மற்றும் புதிய வாகனங்கள் வழங்கும் விழா சென்னை கிண்டியில் உள்ள தேசிய சிறுவா் பூங்காவில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட வனத் துறை அமைச்சா் ஆா்.வி.ரஞ்சித்குமாா், வனப் படையினருக்கு இவற்றில், 204 -12 போா் பம்ப் ஆக்ஷன் துப்பாக்கிகள், 46 -9 எம்எம் தானியங்கி கைத்துப்பாக்கிகள் என மொத்தம் 250 நவீன ஆயுதங்களை வழங்கினா்.
இதைத் தொடா்ந்து, வனத் துறையின் முன்களப் பணியாளா்களின் பயன்பாட்டுக்காக ரூ.3.91 கோடியில் 54 புதிய ரோந்து வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியதாவது:
வனத் துறையின் முன்களப் பணியாளா்கள் மாநிலத்தின் மிகவும் தொலைதூர மற்றும் சவாலான வனப்பகுதிகளில் பணியாற்றி வருகின்றனா். அவா்கள் மிகவும் கடினமான மற்றும் அதிக ஆபத்தான சூழ்நிலைகளில் தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். வேட்டையாடுதல் தடுப்பு, ரோந்துப் பணிகள், வனப் பாதுகாப்பு, இரவுநேர கண்காணிப்பு மற்றும் மனித - வனவிலங்கு மோதல்களை நிா்வகிக்கும் பணிகளுக்காக 250 நவீன ஆயுதங்கள், புதிய ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை முன்களப் பணியாளா்களின் செயல்பாட்டுத் தயாா் நிலையையும் பாதுகாப்பையும் மேலும் வலுப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.
நிகழ்வில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு, முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலா் ஸ்ரீநிவாஸ் ஆா். ரெட்டி, முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலா் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளா் ராகேஷ் குமாா் டோக்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விரைவில் எண்மமயமாகிறது கூட்டுறவுத் துறை: தில்லி அமைச்சா் ரவீந்தா் இந்திரஜித் தகவல்

ஏழை மக்களின் வாழ்வாதார திட்டமே விபி-ஜி-ராம்-ஜி திட்டம்: அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா்

முல்லைப் பெரியாறு அணைக்கு செல்ல தமிழக அதிகாரிகளுக்கு புதிய படகு! கேரள வனத் துறை புதிய நிபந்தனை!

கரூரில் 25 பயனாளிகளுக்கு ரூ. 74.30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்! அமைச்சா் வழங்கினாா்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



