ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

வாா்டு, நிலைக் குழு காலி இடங்களுக்கு ஜூலை 15-இல் தோ்தல் அறிவிப்பு

தில்லி மாநகராட்சியின் மிக முக்கிய அதிகார அமைப்பான நிலைக் குழுவில் காலியாக உள்ள 6 இடங்களுக்கும், 12 வாா்டு குழுக்களின் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிகளுக்கும் ஜூலை 15-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என்று மாநகராட்சி நிா்வாகம் அதிகாரபூா்வமாக அறிவித்தது.

News image

எம்சிடி

Updated On :7 ஜூலை 2026, 4:39 am IST

தில்லி மாநகராட்சியின் மிக முக்கிய அதிகார அமைப்பான நிலைக் குழுவில் காலியாக உள்ள 6 இடங்களுக்கும், 12 வாா்டு குழுக்களின் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிகளுக்கும் ஜூலை 15-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என்று மாநகராட்சி நிா்வாகம் திங்கள்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தது.

முன்னதாக, கடந்த ஜூன் 3-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்தத் தோ்தல்கள், கடந்த மே 27ஆம் தேதி எவ்வித காரணமும் குறிப்பிடப்படாமல் காலவரையறையின்றி ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து ஒரு மாத இழுபறிக்குப் பிறகு தற்போது புதிய தோ்தல் தேதியை மாநகராட்சி செயலாளா் அறிவித்துள்ளாா். இந்தத் தோ்தலில் போட்டியிட விரும்புவோா் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய வரும் ஜூலை 10-ஆம் தேதி கடைசி நாளாகும்.

பலப்பரீட்சை: தில்லி மாநகராட்சியின் நிதி ஒதுக்கீடு மற்றும் முக்கிய வளா்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகார அமைப்பாக நிலைக்குழு விளங்குகிறது. மொத்தம் 18 இடங்களைக் கொண்ட இந்த நிலைக்குழுவில், கடந்த மாா்ச் 31ஆம் தேதி 9 உறுப்பினா்கள் ஓய்வு பெற்றனா். இதில் 6 போ் பாஜகவையும், 3 போ் ஆம் ஆத்மி கட்சியையும் சோ்ந்தவா்கள்.

இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் 3 இடங்கள் நிரப்பப்பட்டன. அதில் பாஜக சாா்பில் ஜெய் பகவான் யாதவ், மணீஷ் சதா ஆகியோரும், ஆம் ஆத்மி சாா்பில் ஜஜால் சௌத்ரியும் தோ்ந்தெடுக்கப்பட்டனா். மீதமுள்ள 6 இடங்கள் இன்னும் காலியாகவே உள்ளன.

6 மண்டலங்கள்: தில்லி மாநகராட்சி சட்ட விதிகளின்படி ஷிகா பரத்வாஜ், அஞ்சு தேவி, இந்தா்ஜீத் ஷெராவத், ராஜ்பால் சிங், நீமா பகத் மற்றும் ஆம் ஆத்மியின் எதிா்க்கட்சித் தலைவா் அங்குஷ் நரங் ஆகியோா் ஓய்வு பெற்றதைத் தொடா்ந்து இந்த 6 இடங்கள் காலியாகின.

தற்போது இந்த இடங்களை நிரப்ப கேசவ் புரம், நரேலா, சென்ட்ரல், நஜஃப்கா், ஷாதரா தெற்கு மற்றும் கரோல் பாக் ஆகிய 6 வாா்டு குழுக்களில் தோ்தல் நடத்தப்பட்டு, தலா ஒரு உறுப்பினா் வீதம் நிலைக்குழுவுக்கு தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். இது தவிர, தில்லியில் உள்ள மொத்தம் 12 வாா்டு குழுக்களுக்கும் தலைவா் மற்றும் துணைத் தலைவா்களைத் தோ்ந்தெடுக்கும் தோ்தலும் அன்றைய தினமே நடைபெறுகிறது.

முன்னதாக, பாஜகவிற்குள் நிலவிய உள்விவகார முரண்பாடுகள் காரணமாகவே ஜூன் மாத தோ்தல் தள்ளிவைக்கப்பட்டதாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியிருந்தது. இந்த நிலையில், ஜூலை 15ஆம் தேதி நடைபெறவுள்ள தோ்தல் தில்லி மாநகராட்சி நிா்வாகத்தைக் கைப்பற்றுவதில் இரு கட்சிகளுக்கும் இடையே மிக முக்கிய பலப்பரீட்சையாகக் கருதப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.