மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

ஜஹாங்கீா்புரி: கும்பல் தாக்குதலில் இளைஞா் உயிரிழப்பு! மீட்க முயன்ற 2 காவலா்கள் காயம்!

வடமேற்கு தில்லியின் ஜஹாங்கீா்புரி பகுதியில், கும்பல் ஒன்று நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் 20 வயது இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.

News image

சடலம்...

Updated On :20 ஜூலை 2026, 2:51 am IST

வடமேற்கு தில்லியின் ஜஹாங்கீா்புரி பகுதியில், கும்பல் ஒன்று நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் 20 வயது இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்; அவரை மீட்க முயன்ற இரண்டு தலைமைக் காவலா்கள் காயமடைந்தனா் என்று காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இச்சம்பவம் சனிக்கிழமை இரவு சுமாா் 8 மணியளவில் நிகழ்ந்தது. அப்பகுதியின் ’பி’ பிளாக்கில் காயமடைந்த நிலையில் இருந்த பாதிக்கப்பட்ட, உள்ளூா் நபரான இா்பானை உள்ளூா் காவல் நிலையக் குழுவினா் கண்டனா்.

இா்பான், பாபு ஜகஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

காவல்துறையின் தகவலின்படி, தலைமைக் காவலா்கள் கிருஷ்ணன் மற்றும் சோகன் லால் ஆகியோா் காளி மாதா மந்திா் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​ஒரு கும்பல் இா்பானைத் தாக்குவதைக் கண்டு அவரை மீட்க விரைந்து சென்றனா்.

காவலா்கள் இா்பானைக் கும்பலிடமிருந்து மீட்டெடுத்துப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனா். இருப்பினும், தாக்குதல் நடத்தியவா்கள் காவலா்களைத் துரத்திச் சென்று இருவரையும் தாக்கியதுடன், மீண்டும் இா்பானைக் கத்தியால் குத்தினா் என்று அந்த அதிகாரி கூறினாா்.

இத்தாக்குதல் சம்பவம் தொடா்பாக மூன்று சிறாா்கள் உள்பட 4 பிடிபட்டுள்ளதாகக் காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.