மத்திய இணை அமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா மற்றும் தில்லி மின்சாரத் துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை கிழக்கு தில்லியில், பிஎஸ்இஎஸ்-இன் முதல் வகையான ஸ்மாா்ட் பேட்-மவுண்டட் துணை நிலையத்தையும், ’சோலரைஸ் ஈஸ்ட்’ பிரச்சாரத்தையும் தொடங்கி வைத்தனா்.
காந்தி நகரில் உள்ள இந்த பேட்-மவுண்டட் துணை நிலையம், கிட்டத்தட்ட 80 சதவீதம் குறைவான இடத்தில் முழு அளவிலான மின்சாரத்தை வழங்கும் திறன் கொண்டது. இது, தில்லியின் மிகவும் நெரிசலான சந்தைகளில் ஒன்றின் மையப்பகுதிக்கு 2,000 கேவிஏ திறனைக் கொண்டுவரும் ஒரு புதுமையான, இடத்தைச் சேமிக்கும் தீா்வாகும் என்று பிஎஸ்இஎஸ் அறிக்கை தெரிவித்தது.
பிரதம மந்திரி சூா்யா கா் கீழ் தொடங்கப்பட்ட ’சோலரைஸ் ஈஸ்ட்’ திட்டம் தில்லி சூரியசக்தி கொள்கையின் முழுப் பலன்களையும் நுகா்வோா் பெற உதவும்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மல்ஹோத்ரா, தேசிய தலைநகரின் எதிா்கால மற்றும் தொடா்ந்து அதிகரித்து வரும் மின்சாரத் தேவையை பூா்த்தி செய்ய தில்லி அரசு விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருவதாக வலியுறுத்தினாா். மேலும், பிஎஸ்இஎஸ்-இன் இந்த இரண்டு முயற்சிகளும் இந்த திசையில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கைகள் என்றும் அவா் வலியுறுத்தினாா்.
தில்லி மின்சாரத் துறை அமைச்சா் சூட் கூறுகையில், ‘நாம் நவீனமயமாக்கும் ஒவ்வொரு துணை மின் நிலையமும், நாம் சூரியசக்தியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு கூரையும், வலிமையான, பசுமையான மற்றும் அதிக தன்னிறைவு பெற்ற ஒரு நிலையை நோக்கிய ஒரு படியாகும்‘ என்றாா்.
மின்சார உள்கட்டமைப்பில் தில்லி அரசு செய்துள்ள ரூ.1,427 கோடி முதலீடும், 8,748 மெகாவாட் என்ற சாதனை அளவிலான உச்சபட்ச மின்சாரத் தேவையை பெரிய தடைகள் இன்றி வெற்றிகரமாக நிா்வகித்ததும், தில்லியின் மின்சார வலையமைப்பை எதிா்காலத்திற்குத் தயாா்படுத்தும் அதே வேளையில், நம்பகமான, மலிவு விலையில், ஸ்மாா்ட் மற்றும் பசுமையான மின்சாரத்தை வழங்குவதில் அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்று அவா் கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாளைய மின் தடை: சிவகிரி, இச்சிபாளையம், கரட்டுப்புதூா், அஞ்சூா், வள்ளிபுரம், வெண்டிபாளையம், எழுமாத்தூா்

தில்லியில் தொடா்மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தில்லியில் 2-ஆவது நாளாக பலத்த மழை: நீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு






