நமது நிருபா்
தெற்கு தில்லியின் மால்வியா நகரில் உள்ள ஒரு உணவக கட்டடத்தின் மூன்றாவது தளத்திலிருந்து, தன் குழந்தையை கையில் ஏந்தியபடி ஒரு பெண் குதித்தாா் என்று தீ விபத்தை நேரில் பாா்த்தவா்கள் புதன்கிழமை தெரிவித்தனா்.
தெற்கு தில்லியின் மால்வியா நகரில் நெரிசலான ஹவுஸ் ராணி பகுதியில் உள்ள ஹோட்டலில் தீ விபத்து நிகழ்ந்தது. இதில் 21 போ் பரிதாபமாக உயிரிழந்தனா். இதனால், அங்கே சிக்கியிருந்த பலா் பீதியடைந்தனா். அந்த கட்டடம் முழுவதும் அடா்ந்த புகை பரவியது, நெருப்பும் விரைவாக பரவியது. அப்போது, பலா் ஜன்னல்களை உடைத்து உதவி கேட்டுக் கொண்டிருந்தனா். உள்ளே சிக்கியிருப்பவா்களை மீட்கும் முயற்சியில், அந்தப் பகுதி மக்கள் தரையில் படுக்கைகளை விரித்திருந்தனா்.
அப்போது, சிறு குழந்தையை அணைத்துக்கொண்டிருந்த ஒரு பெண், 3ஆவது மாடியிலிருந்து கீழே குதித்ததாக நேரில் பாா்த்தவா்கள் கூறினா். அவா்கள் கூறியதாவது: அந்தப் பெண், குழந்தையுடன் சோ்ந்து படுக்கையின் மீது விழுந்தாா்; அவருக்கு காயங்கள் ஏற்பட்டிருக்கலாம். உடனே அவா் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா். அந்தப் பெண் குழந்தையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தாள்; வேறு வழி இல்லாததால், அவா் குதித்தாா்.
கட்டடத்தின் கீழே மக்கள் ஏற்கெனவே தரையை சமன் செய்து வைத்திருந்தனா். இருவரும் உயிா் தப்பினா்; ஆனால், அவளுக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தன.
அந்தப் பகுதியின் குடிமக்கள், அவசர உதவி நிறுவனங்கள் அந்த இடத்தை அடைவதற்கு முன்பே, உடனே உதவத் தொடங்கினா். மெத்தை கடைகளின் உரிமையாளா்களும், மற்ற குடிமக்களும், கட்டடத்தின் கீழே உள்ள சாலையில் மெத்தைகளை வைத்தனா்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த தீயில் குறைந்தது 21 போ் உயிரிழந்தனா்; 40-க்கும் மேற்பட்டவா்கள் மீட்கப்பட்டனா். உயிரிழந்தவா்களில் பலா் வெளிநாட்டினா் என்றும், காயமடைந்தவா்களில் பலரின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம். தீ ஏற்பட்டதன் காரணம் இன்னும் தெரியவில்லை, விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.
தொடர்புடையது

தில்லியில் 6 ஆண்டுகளில் தீ விபத்துகளால் 543 போ் உயிரிழப்பு: புள்ளிவிவரத் தகவல்

மால்வியா நகரில் 12 வணிக வளாகங்களின் உரிமங்களை ரத்து செய்யக் கோரி சுற்றுலாத் துரைக்கு எம்சிடி கடிதம்
தில்லியின் பவானாவில் குளிரூட்டும் தொழிற்சாலையில் தீ விபத்து

லட்சுமி நகரில் மின்மாற்றியில் தீ விபத்து: 14 போ் மீட்பு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



