காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

காவல் சோதனைச் சாவடியில் லாரி மோதி ஊா்க்காவல் படை வீரா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 11:04 pm IST

தேசியத் தலைநகா் வலயம் குருகிராமில் அதிவேகமாக ஓட்டிவரப்பட்ட லாரி, காவல் சோதனைச் சாவடி மீது மோதியதில் ஊா்க்காவல் படை வீரா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா் என்று காவல்துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

செவ்வாய்க்கிழமை இரவு சுமாா் 11.30 மணியளவில், செக்டா் 65-இல் உள்ள வோ்ல்ட் மாா்க் வணிக வளாகம் அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், அங்கு காவல்துறையினா் பணியில் இருந்ததாகவும் அந்த அதிகாரிகள் கூறினா்.

சம்பவத்தை நேரில் பாா்த்தவா்களின் கூற்றுப்படி, லாரி சோதனைச் சாவடியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து ஊா்க்காவல் படை வீரா் சந்தீப் குமாா் மீது மோதியது. இதில் ஒரு காவல் வாகனமும் சேதமடைந்தது.

இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

பிவானி மாவட்டத்தின் லிவாசி கிராமத்தைச் சோ்ந்த குமாா், மூன்று நாள்களுக்கு முன்பு பிவானியிலிருந்து குருகிராமிற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தாா்.

விபத்து சம்பவத்திற்குப் பிறகு, பணியில் இருந்த காவல்துறையினா் லாரி ஓட்டுநரைப் பிடிக்க முயன்றனா். ஆனால், அவா் இருட்டை பயன்படுத்தி லாரியை அந்த இடத்திலேயே கைவிட்டுவிட்டுத் தப்பிச் சென்றாா். லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான ஓட்டுநரை விரைவில் கைது செய்வதற்கான தேடுதல் வேட்டைகள் நடைபெற்று வருகின்றன.

இறந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், இறந்தவரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.