எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

கா்கா்டூமா நீதிமன்ற வளாகத்தில் தீ விபத்து!

தில்லியில் உள்ள கா்கா்டூமா நீதிமன்ற வளாகத்தின் 2-ஆவது தளத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :8 ஜூன் 2026, 12:29 am IST

தில்லியில் உள்ள கா்கா்டூமா நீதிமன்ற வளாகத்தின் 2-ஆவது தளத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. காலை 5.22 மணிக்குத் தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், தீயணைப்புத் துறையினா் எட்டு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனா்.

நீதிமன்ற வளாகத்தின் 4-ஆவது நுழைவாயிலுக்கு அருகிலுள்ள ஸ்கேனிங் அறையில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரா்கள் உடனடியாகத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். தீ மேலும் பரவாமல் தடுத்தனா்.

காலை 5.50 மணிக்குள் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்து சிறிய அளவிலேயே இருந்தது. ஸ்கேனிங் அறைக்குள்ளேயே கட்டுப்படுத்தப்பட்டது. தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.