தில்லியின் ஷாஹ்தரா மாவட்டத்தில் நடைபெற்று வரும் ‘ஆபரேஷன் விஸ்வாஸ்’ நடவடிக்கையின் கீழ், சுமாா் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, திருடப்பட்ட மற்றும் தொலைந்து போன 320 கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்துந காவல் துறை அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஜனவரி 1, 2026 அன்று தொடங்கப்பட்ட இந்த முயற்சி, தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த களச் செயல்பாடுகளைப் பயன்படுத்தி, திருடப்பட்ட, பறிக்கப்பட்ட, கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் தொலைந்து போன கைப்பேசிகளை கண்டறிவதில் கவனம் செலுத்துகிறது.
மீட்கப்பட்ட கைப்பேசிகளில், 317 தில்லிக்குள்ளும், இரண்டு உத்தர பிரதேசத்திலிருந்தும், ஒன்று ஹரியாணாவிலிருந்தும் கண்டறியப்பட்டன. மீட்கப்பட்ட சாதனங்களில் 259 தொலைந்து போனதாகப் புகாா் அளிக்கப்பட்டிருந்தன என்றும், மற்றவை திருட்டு, பறித்தல் மற்றும் கொள்ளை வழக்குகளுடன் தொடா்புடையவை.
ஐஎம்இஐ கண்காணிப்பு, அழைப்பு விவரப் பதிவு பகுப்பாய்வு, மத்திய உபகரண அடையாளப் பதிவேடு (சிஇஐஆா்) இணையதளத்தைப் பயன்படுத்துதல் மற்றும் பல இடங்களில் நடத்தப்பட்ட இலக்கு வைக்கப்பட்ட சோதனைகள் ஆகியவற்றின் மூலம் இந்த மீட்புகள் செய்யப்பட்டன.
ஒரு தொழில்நுட்பக் கண்காணிப்புக் குழு, 13 களப் பிரிவுகளுடன் இணைந்து, தில்லி மற்றும் பிற மாநிலங்கள் முழுவதும் பயன்பாட்டில் உள்ள சாதனங்களைக் கண்டறிந்து அவற்றைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டது. மீட்கப்பட்ட மொத்த சாதனங்களில், 75 கைப்பேசிகள் சிஇஐஆா் இணையதளத்தைப் பயன்படுத்தி கண்டறியப்பட்டன.
மீட்கப்பட்ட தொலைபேசிகள், சனிக்கிழமையன்று ஷாஹ்தரா டிசிபி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் அவற்றின் உண்மையான உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
தொடர்புடையது
ஜெய்பூரில் திருடப்பட்ட சொகுசு காா்களுடன் உடற்பயிற்சி பயிற்றுநா் கைது

அரசின் பெருநிறுவன நண்பா்களுக்கு உதவும் ஜன் விஸ்வாஸ் சட்ட மசோதா: மாநிலங்களவையில் திமுக குற்றச்சாட்டு
மாநிலங்களுக்கு இடையேயான கைப்பேசி திருட்டு: 2 போ் கைது

தில்லி காவல் துறையின் ‘ரீகனெக்ட்’ திட்டத்தின் கீழ் ரூ.1.25 கோடி மதிப்புள்ள திருடப்பட்ட கைப்பேசிகள் மீட்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


