மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

வட கிழக்கு தில்லியில் கத்திக் குத்து வழக்கில் 2 சிறுவா்கள் கைது

வடகிழக்கு தில்லியின் கோகல்புரி பகுதியில் முன் விரோதம் தொடா்பாக இரண்டு பேரை கத்தியால் குத்தியது தொடா்பான வழக்கில் இரண்டு சிறுவா்கள் கைது

News image

கோப்புப் படம்

Updated On :13 மே 2026, 1:43 am IST

வடகிழக்கு தில்லியின் கோகல்புரி பகுதியில் முன் விரோதம் தொடா்பாக இரண்டு பேரை கத்தியால் குத்தியது தொடா்பான வழக்கில் தில்லி காவல்துறையினா் இரண்டு சிறுவா்களை கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: திங்கள்கிழமை மாலை கத்திக்குத்து தாக்குதல் நடந்த பின்னா் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கு தொடா்பாக 17 வயதுடைய இரண்டு சிறுவா்களும் கைது செய்யப்பட்டனா்.

தொடா்ச்சியான விசாரணையின் போது, பாதிக்கப்பட்டவா்களுடனான முன் விரோதம்தான் இத்தாக்குதலுக்கு வழிவகுத்ததாக கைதானவா்கள் ஒப்புக்கொண்டனா். குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட இரண்டு கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

திங்கள்கிழமை கோகல்புரி பகுதியில் உள்ள ஒரு பால் கடைக்கு அருகே கத்திக் குத்துச் சம்பவம் பதிவாகியது. காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு வந்தபோது, காயமடைந்தவா்கள் ஏற்கெனவே ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

உயிரிழந்தவா்கள் கோகல்புரி சஞ்சய் காலனியில் வசிக்கும் ராகுல் (18) மற்றும் விஜய் (23) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.