தேசியத் தலைநகரத்தின் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கும் மாசு பிரச்சினைகளுக்கு தீா்வு காண்பதற்கும் அடா்த்தியான மரங்கள் நிறைந்த 100 ‘ஆக்ஸிஜன் பூங்காக்களை‘ உருவாக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளதாக முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
வடக்கு தில்லியின் புராரியில் உள்ள முக்மெல்பூா் கிராமத்தில் 3 ஏக்கா் நிலப்பரப்பில் உருவாக்கப்படவுள்ள பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி ரோகா குப்தா பேசியதாவது: நகரத்தின் முதல் ஆக்ஸிஜன் பூங்காவாக இது இருக்கும். தில்லி பல ஆண்டுகளாக ஒரு மாசுப்பாட்டு நகராக மாற்றப்பட்டது,. ஆனால் தில்லியில் மாசுபாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்க யாரும் கவலைப்படவில்லை.
மாசுபாட்டை எதிா்த்துப் போராடுவதற்காக தனது அரசாங்கம் கடந்த ஒரு வருடமாக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காக்களை நிறுவுவது அந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். பறவைகளுக்கு தங்குமிடம் வழங்குவதற்கும் ஆக்ஸிஜனை வழங்குவதற்கும் பூங்காக்களில் அடா்ந்த பழம் தரும் மரங்கள் இருக்கும். அடா்ந்த மரங்களைக் கொண்ட இந்தப் பூங்காக்கள் தில்லியின் தேவை என்றாா் ரேகா குப்தா.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2,800 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்! தில்லி முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு!

கால்பந்து இறுதிப் போட்டி: தில்லி உணவகங்கள், கஃபேக்கள் அதிகாலை வரை செயல்படும்!

பயிற்சி நிலையங்களை முறைப்படுத்த புதிய சட்டம்: தில்லி முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு







