புராரி பகுதியில் வடிகால் அருகே பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

வட தில்லியின் புராரி பகுதியில், வடிகால் ஒன்றிற்கு அருகிலுள்ள காலி நிலத்தில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மீட்கப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

பிரதிப் படம்

Updated On :

வட தில்லியின் புராரி பகுதியில், வடிகால் ஒன்றிற்கு அருகிலுள்ள காலி நிலத்தில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

அந்தப் பெண்ணின் முகம் மற்றும் தலையில் காயங்கள் இருந்தன. அவா் கற்களால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அந்தப் பெண் யாா் என்பதைக் கண்டறியவும், அவரது குடும்பத்தினரைக் கண்டறியவும் காவல்துறையினா் முயற்சி மேற்கொண்டு வருகின்றனா். சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபா்களை அடையாளம் காணவும், கொலைக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் வரிசையைத் தெரிந்துகொள்ளவும் அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா். இது குறித்த மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.