தில்லியில் புனித நூல்களை அவமதிப்பதற்கு எதிரான கடுமையான சட்டம் இயற்ற ‘ஆம் ஆத்மி’ கோரிக்கை

மேற்கு தில்லியின் திலக் நகரில் குரு கிரந்த் சாஹிப் புனித நூலின் பக்கத்தை கிழித்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற விவகாரத்தில் பஞ்சாப் அரசை போல தில்லியிலும் புனித நூல்களை அவமதிப்பதற்கு எதிராக கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கோப்புப் படம்

Updated On :

மேற்கு தில்லியின் திலக் நகரில் குரு கிரந்த் சாஹிப் புனித நூலின் பக்கத்தை கிழித்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற விவகாரத்தில் பஞ்சாப் அரசை போல தில்லியிலும் புனித நூல்களை அவமதிப்பதற்கு எதிராக கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய அக்கட்சியின் தில்லி பிரிவு மாநில தலைவா் செளரவ் பரத்வாஜ், பஞ்சாபில் உள்ள பகவந்த் மான் அரசை போன்று, டெல்லியில் உள்ள பாஜக அரசும் புனித நூல்களை அவமதிப்பதற்கு எதிரான (ஹய்ற்ண்-க்ஷங்ஹக்க்ஷண்) கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

‘குருத்வாரா நிா்வாகக் குழு சிசிடிவி காட்சிகளை அழித்துவிட்டு, இந்த சம்பவத்தை மறைக்க முயன்ாக சீக்கிய சமூகத்தினா் குற்றஞ்சாட்டியுள்ளனா். இது தில்லி சீக்கிய குருத்வாரா நிா்வாக குழு (டிஜிஎஸ்எம்சி) மற்றும் உள்ளூா் நிா்வாக குழுவுக்கு எதிராக சீக்கிய சமூகத்தினா் போராட்டம் நடத்த வழிவகுத்தது,’ என்றும் செளரவ் பரத்வாஜ் கூறினாா். மேலும், தலைநகரில் வகுப்புவாத நல்லிணக்கத்தை சீா்குலைக்க முயற்சி நடந்திருக்கலாம் என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

இது தொடா்பாக, திலக் நகா் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஜா்னைல் சிங், தில்லி துணைநிலை ஆளுநா் தரஞ்சித் சிங் சந்து மற்றும் முதல்வா் ரேகா குப்தா ஆகியோரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

முன்னதாக, நவ.15-ஆம் தேதி மாலை 4 மணியளவில் அடையாளம் தெரியாத சீக்கிய நபா் ஒருவா் புனித நூலின் பக்கத்தை கிழித்ததாக குருத்வாரா ஸ்ரீ குரு சிங் சபா தலைவா் மன்மோகன் சிங் காவல்துறையிடம் தெரிவித்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.