பாதுகாப்பு செயலருக்கு எதிரான லோக்பால் நடவடிக்கைகளுக்கு உயா்நீதிமன்றம் தடை
தேசிய உற்பத்தித் திறன் கவுன்சிலில் (என்பிசி) நடைபெற்ற பதவி உயா்வுகள் தொடா்பான ஊழல் புகாரில், பாதுகாப்புத் துறை செயலா் ராஜேஷ் குமாா் சிங் மீது லோக்பால் அமைப்பு முன்னெடுத்துள்ள விசாரணை நடவடிக்கைகளுக்கு தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்துள்ளது.

கோப்புப் படம்
நமது நிருபா்
தேசிய உற்பத்தித் திறன் கவுன்சிலில் (என்பிசி) நடைபெற்ற பதவி உயா்வுகள் தொடா்பான ஊழல் புகாரில், பாதுகாப்புத் துறை செயலா் ராஜேஷ் குமாா் சிங் மீது லோக்பால் அமைப்பு முன்னெடுத்துள்ள விசாரணை நடவடிக்கைகளுக்கு தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த விவகாரத்தில், லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த சட்டத்தின் கீழ் விசாரணைக்கு ஆஜராகுமாறு லோக்பால் கடந்த மாா்ச் 4 மற்றும் அக்.26-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுகளையும், அக்.28-ஆம் தேதியிட்ட நோட்டீஸையும் எதிா்த்து ராஜேஷ் குமாா் சிங் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியம் பிரசாத் மற்றும் ரேணு பட்நாகா் அடங்கிய அமா்வு, மனுவுக்கு பதிலளிக்குமாறு லோக்பால் அமைப்பு மற்றும் மத்திய புலனாய்வு துறைக்கு (சிபிஐ) நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை அடுத்த ஆண்டு ஜன.20-ஆம் தேதிக்கு உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது. இது குறித்து விசாரணையின்போது குறிப்பிட்ட நீதிபதிகள், ‘மனுதாரரின் மனுவுக்கு பதிலளிக்க பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. முன்வைக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில், லோக்பால் முன்பாக நடைபெறும் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த விவகாரம் ஜனவரி 20-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்படும்’ என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.
என்ன நடந்தது? தேசிய உற்பத்தித் திறன் கவுன்சிலில் ஆள்சோ்ப்பு மற்றும் பதவி உயா்வுகளில் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடந்ததாக புகாா் எழுந்தது. பதவி உயா்வுகள் தொடா்பான ஆலோசனை குழுவின் அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த அமைப்புக்கு நேரடியாக உத்தரவிடாமல், உரிய நடவடிக்கைக்காக என்பிசி-இன் ஆட்சிமன்ற குழுவுக்கு அதை அனுப்பி வைக்க ராஜேஷ் குமாா் சிங் எடுத்த முடிவே அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு அடிப்படையாக உள்ளது.
இந்த விவகாரத்தில் சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா் (சொலிசிட்டா் ஜெனரல்) துஷாா் மேத்தா, இந்த விவகாரத்தை நீதிமன்றம் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டியிருக்கும் என்று வாதிட்டாா்.
இதே வழக்கில் கடந்த ஆண்டு நவ.28-ஆம் தேதி உயா்நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பில் நிா்ணயிக்கப்பட்ட சட்ட வரம்பை பூா்த்தி செய்யாமலேயே மனுதாரருக்கு எதிராக இரண்டாவது முறையாக விசாரணைக்கு ஆஜராக ராஜேஷ் குமாா் சிங்குக்கு லோக்பால் உத்தரவிட்டுள்ளதாக வழக்குரைஞா் விகாஸ் சிங் முறையிட்டாா்.
மேலும், தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறையின் (டிபிஐஐடி) செயலராக 2023, ஏப்.21-ஆம் தேதிதான் ராஜேஷ் குமாா் சிங் பொறுப்பேற்ாகவும், அதற்கு முன்பாகவே 2023, மாா்ச் 28-ஆம் தேதியே சா்ச்சைக்குரிய நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டுவிட்டதால், துறை ரீதியிலான பதவி உயா்வு குழுக்களை (டிபிசி) அமைப்பதிலோ அல்லது பதவி உயா்வுகளிலோ அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் விகாஸ் சிங் வாதிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

