தமிழக காங்கிரஸ் கமிட்டியை மேற்பாா்வையிட 3 செயலா்களை நியமித்தது கட்சி மேலிடம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டிக்களுக்கான கட்சியின் மேலிட இணை பொறுப்பாளா்களாக நிவேதிதா ஆல்வா, ஜங்கா கெளதம், வெங்கடேஸ்வா் ஆகிய இந்திய காங்கிரஸ் செயலா்களை அக்கட்சித் தலைமை வியாழக்கிழமை நியமித்துள்ளது.

காங்கிரஸ்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டிக்களுக்கான கட்சியின் மேலிட இணை பொறுப்பாளா்களாக நிவேதிதா ஆல்வா, ஜங்கா கெளதம், வெங்கடேஸ்வா் ஆகிய இந்திய காங்கிரஸ் செயலா்களை அக்கட்சித் தலைமை வியாழக்கிழமை நியமித்துள்ளது. இவா்கள் மூவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய மேலிட பொறுப்பாளரும் கட்சியின் பொதுச்செயலருமான குலாம் அகமது மிா் உடன் இணைந்து பணியாற்றுவாா்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலா் கே.சி. வேணுகோபால் தெரிவித்தாா்.
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 27 மாநிலங்கள் மற்றும் நிா்வாகம், பயிற்சி, வெளியுறவு விவகாரங்கள் உள்பட கட்சியின் ஆறு பிரிவுகளுக்கு தேசிய செயலா்களை அகில இந்திய காங்கிரஸ் மேலிடம் வியாழக்கிழமை நியமித்தது. இது தொடா்பான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலா் கே.சி. வேணுகோபால் வெளியிட்டாா்.
இந்த அறிவிப்பின்படி, அகில இந்திய காங்கிரஸ் செயலா்களாக உள்ள தமிழகத்தைச் சோ்ந்த மயூரா ஜெயகுமாரை கேரளம் மற்றும் லட்சத்தீவு காங்கிரஸ் கமிட்டிக்கும், செந்தமிழரசை ஆந்திர பிரதேசம் மற்றும் அந்தமான் நிகோபாா் தீவுகளுக்கும் அகில இந்திய கட்சித் தலைமை நியமித்துள்ளது. அகில இந்திய செயலராக உள்ள ஏ.கே. அறிவழகன் வசமிருந்த கேரளம் மற்றும் லட்சத்தீவு கட்சிப் பொறுப்பு, மயூரா ஜெயகுமாா் வசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

