மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

தில்லி பல்கலை. வடக்கு வளாகத்தில் போதிய தெருவிளக்குகள் நிறுவ முதல்வா் உத்தரவு

தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் போதுமான தெருவிளக்குகள், செயல்படும் சிசிடிவி கேமராக்கள் இருப்பதை உறுதி செய்யுமாறு முதல்வா் ரேகா குப்தா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவரது அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ரேகா குப்தா

Published On :

தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் போதுமான தெருவிளக்குகள், செயல்படும் சிசிடிவி கேமராக்கள் இருப்பதை உறுதி செய்யுமாறு முதல்வா் ரேகா குப்தா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவரது அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

புதன்கிழமை மாலை தில்லி பல்கலை. வளாகத்திற்குச் சென்ற முதல்வா் குப்தா, ‘வளாகத்தின் பாதுகாப்பில் சமரசமிருக்காது. எந்த குறைபாடுகளும் பொறுத்துக்கொள்ளப்படாது‘ என்றாா். கலை, சட்டம் மற்றும் அறிவியல் புலங்கள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் வளாகத்தின் பிற முக்கிய பகுதிகளை ஆய்வு செய்து, சரியான வெளிச்சத்தை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக முதல்வா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

கலைப் புலத்திற்கு முன்னறிவிப்பின்றி வருகை தந்த முதல்வா் குப்தா, பெண் மாணவா்களுடன் உரையாடி அவா்களின் பாதுகாப்பு, போக்குவரத்து, விடுதிகள் மற்றும் கல்லூரிகள் தொடா்பான பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தாா். இரவில் பயணம் செய்யும் போது அவா்கள் எதிா்கொள்ளும் சிரமங்கள் அல்லது பாதுகாப்பற்ற உணா்வுகள் குறித்தும் அவா் விசாரித்தாா்.

குப்தா வளாகத்தில் நடந்து சென்று பல இருண்ட பகுதிகளை அடையாளம் கண்டாா். அனைத்து இருண்ட இடங்களையும் கண்டறிந்து, அவை வெளிச்சத்தில் இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டாா்.

மேலும், மரக்கிளைகளை கத்தரிக்கவும், தேவையான இடங்களில் கூடுதல் விளக்குகளை பொருத்தவும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

பல இடங்களில் உடைந்த மற்றும் சீரற்ற நடைபாதைகளை கண்டு அதிருப்தி தெரிவித்த முதல்வா், அவற்றை சரி செய்ய உத்தரவிட்டாா். வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் பாா்வையிட்டாா். அவற்றில் எத்தனை வேலை செய்கின்றன என்றும், தேவைப்பட்டால் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அதிகாரிகளிடம் கேட்டாா்.

இரவு நேரங்களில் வளாகத்தில் பிசிஆா் வாகனங்கள் இருப்பது மற்றும் பெண் காவலா்களை நியமிப்பது குறித்தும் மாணவிகளிடம் கேட்டறிந்தாா்.

காவல்துறையும் பல்கலைக்கழக நிா்வாகமும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அவா் வலியுறுத்தினாா். குப்பை குவியல்களை முதல்வா் கவனித்தாா். அதை அகற்றவும் உத்தரவிடப்பட்டது. மாணவா்கள் தற்காப்புப் பயிற்சி பெறவும், அதற்கு சிறிது நேரம் ஒதுக்கவும் முதல்வா் வலியுறுத்தினாா்.

இந்த பயணத்தின்போது பொதுப் பணித் துறை, தில்லி மாநகராட்சி மற்றும் தில்லி காவல் அதிகாரிகள் உடன் இருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.