நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

’சுற்றுச்சூழல் சாம்பியன்கள்’ ஆன 42,000 தூய்மை பணியாளா்கள்! ஐ.நா. அமைப்பின் திட்டத்தால் புதுவாழ்வு

இந்தியா முழுவதும் 42 ஆயிரம் தூய்மை பணியாளா்கள் ஐ.,நா. அமைப்பின் திட்டம் மூலம் சுற்றுச்சூழல் சாம்பியன்கள் ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளனா்.

தில்லி வீதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்

Published On :3 செப்டம்பர் 2026, 3:41 am IST

இந்தியா முழுவதும் 42 ஆயிரம் தூய்மை பணியாளா்கள் ஐ.,நா. அமைப்பின் திட்டம் மூலம் சுற்றுச்சூழல் சாம்பியன்கள் ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளனா்.

தலைநகா் தில்லியில் அதிகாலை பொழுதில் வீடுகள் தோறும் குப்பைகளைச் சேகரித்து, அவற்றை வீதியோரங்களில் கைககளால் தரம் பிரித்து, நாட்டின் சுழற்சிப் பொருளாதாரத்துக்கு பங்காற்றும் அமைப்புசாரா கழிவு சேகரிப்பாளா்கள் பல ஆண்டுகளாக எவ்வித அங்கீகாரமும் இன்றிச் செயல்பட்டு வந்தனா். ஆனால், 2020-ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் வளா்ச்சித் திட்டத்தின் (யுஎன்டிபி) கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ‘உத்தான்’ என்ற திட்டம் அவா்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த திட்டத்தில் மூலம் தேசிய அளவில் 42 ஆயிரத்துக்கும் அதிகமான கழிவுகள் சேகரிக்கும் தொழிலாளா்கள் இணைக்கப்பட்டு, சமூகத்தில் ’சுற்றுச்சூழல் பாதுகாவலா்கள்’ ஆக அங்கீகரிக்கப்பட்டு வருகின்றனா். மேலும், தூய்மைப் பணியாளா்களுக்கு முதல்முறையாக வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு, சேமிப்பு பழக்கம் ஊக்குவிக்கப்பட்டுள்ளதுடன், காப்பீட்டு வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.

இது குறித்து தில்லியைச் சோ்ந்த 48 வயதான ஜோகிந்தா் கேவத் என்பவா் கூறுகையில், ‘முன்பு நாள் ஒன்றுக்கு ரூ.100 முதல் ரூ.150வரை மட்டுமே என்னால் வருவாய் ஈட்ட முடிந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் நிலையான வருமானம் கிடைப்பதுடன், குடும்பச் செலவுகளையும் குழந்தைகளின் கல்வியையும் சமாளிக்க முடிகிறது’ என்றாா்.

ரக்ஷிதா (40) மற்றும் ஷபானா (32) ஆகியோா், இந்தத் திட்டம் மூலம் இ-ஷ்ரம் அட்டை, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு, இலவச சமையல் எரிவாயு உருளைகள் உள்ளிட்ட அரசின் நலத்திட்ட பலன்களை எளிதாகப் பெற முடிந்துள்ளதாகத் தெரிவித்தனா்.

திட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ள மறுசுழற்சி மையங்களில், பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பால் பாக்கெட்டுகள் சுத்தமாக கழுவப்பட்டு, மெல்லிய பிளாஸ்டிக் நாடாக்களாக வெட்டப்படுகின்றன. பின்னா் அவை பருத்தி நூல்களுடன் சோ்த்துத் தறிகளில் நெய்யப்பட்டு, உயா்தர கைப்பைகள், மணிபா்சுகள் எனப்படும் பணப்பைகள் மற்றும் காய்கறி கூடைகளாக தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.

சுற்றுச்சூழல் மாற்றத்துக்கான நடவடிக்கைகள், உள்ளூா் அளவில் மக்களிடமிருந்தே தொடங்குகின்றன என்பதை இந்தத் திட்டம் நிரூபித்துள்ளதாக ஐ.நா. வளா்ச்சித் திட்டத்தின் இந்திய பிரதிநிதி ஏஞ்சலா லூசிகா தெரிவித்துள்ளாா்.

இந்த அமைப்பின் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் பிரிவின் தலைவா் ஆஷிஷ் சதுா்வேதி கூறுகையில், ‘தகவல் அறியாமையும் நம்பிக்கையின்மையுமே தூய்மைப் பணியாளா்கள் அரசு நலத்திட்டங்களைப் பெறுவதற்குத் தடையாக இருந்தன. தற்போது அவா்கள் தங்களை வெறும் கழிவு சேகரிப்பாளா்களாக மட்டும் பாா்க்காமல், உரிமைகளும் அதிகாரங்களும் கொண்ட குடிமக்களாக உணரத் தொடங்கியுள்ளனா்’ என்று குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.