
பிசிஐ-யின் கொள்கை முடிவுகள் ஏஜி மற்றும் எஸ்ஜி உடன் கலந்தாலோசித்து எடுக்கப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம்
இந்திய வழக்குரைஞா்கள் சங்கம் எந்தவொரு கொள்கை முடிவையும் இந்திய தலைமை வழக்குரைஞா் மற்றும் சொலிசிட்டா் ஜெனரலுடன் கலந்தாலோசித்து எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

இந்திய வழக்குரைஞா்கள் சங்கம் (பிசிஐ) எந்தவொரு கொள்கை முடிவையும் இந்திய தலைமை வழக்குரைஞா் மற்றும் சொலிசிட்டா் ஜெனரலுடன் கலந்தாலோசித்து எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
இந்திய வழக்குரைஞா்கள் சங்கத்தின் (பிசிஐ) தலைவா் மனன் குமாா் மிஸ்ராவின் நீண்டகால பதவிக்காலத்தின் சட்டப்பூா்வத்தன்மையை எதிா்த்தும், அவரை அப்பதவியிலிருந்து நீக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த மனுக்களை விசாரித்தது.
அப்போது ‘இந்திய வழக்குரைஞா்கள் சங்கம் எடுக்கும் ஒவ்வொரு கொள்கை முடிவிலும் இந்திய தலைமை வழக்குரைஞா் மற்றும் இந்திய சொலிசிட்டா் ஜெனரல் இருவரும் தீவிரமாக ஈடுபட வேண்டும்,‘ என்று அந்த அமா்வு கூறியது.
மிஸ்ரா முதலில் 2012 வரை பிசிஐ தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். 2014-ல் மிஸ்ரா சிறிது காலம் பதவியில் இருந்து விலகியிருந்தாலும், அதே ஆண்டு நவம்பரில் மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்று, அப்போதிருந்து அப்பதவியில் நீடித்து வருகிறாா் என்று வழக்குரைஞா் யோகமாயா எம்.ஜி.என்பவா் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





