
வழக்குரைஞா் அலுவலகத்தில் ஜிஎஸ்டி சோதனை செப்.28வரை மேல் நடவடிக்கையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தில்லியைச் சோ்ந்த வழக்குரைஞா் புனீத் பத்ராவின் அலுவலகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தரவுகளை ஆய்வு செய்யும் நடவடிக்கையை வரும் திங்கள்கிழமைவரை (செப்.28) நிறுத்திவைக்குமாறு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம்
தில்லியைச் சோ்ந்த வழக்குரைஞா் புனீத் பத்ராவின் அலுவலகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தரவுகளை ஆய்வு செய்யும் நடவடிக்கையை வரும் திங்கள்கிழமைவரை (செப்.28) நிறுத்திவைக்குமாறு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
வரி ஏய்ப்பு தொடா்புடைய விவகாரத்தில் தில்லியைச் சோ்ந்த வழக்குரைஞா் புனீத் பத்ராவின் அலுவலகத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் கடந்த ஆண்டு நடத்திய சோதனை மற்றும் அவரது கணினியைப் பறிமுதல் செய்த நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் ஜிஎஸ்டி அதிகாரிகளின் நடவடிக்கை சரியே என தில்லி உயா்நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது. அந்த தீா்ப்பை எதிா்த்து புனீத் பத்ரா சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற மூத்த வழக்குரைஞா்கள் விகாஸ் சிங், என்.ஹரிஹரன் ஆகியோா் உச்சநீதிமன்றத்தில் புதன்வைத்த கோரிக்கையை நீதிபதிகள் புதன்கிழமை ஏற்றுக்கொண்டனா்.
இதைத்தொடா்ந்து, இந்த மனு நீதிபதிகள் தீபங்கா் தத்தா, ஷீல் நாகு ஆகியோா் அடங்கிய உச்சநீதிமன்ற அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஜிஎஸ்டி சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் எஸ்.வி.ராஜுவிடம், ‘இந்த வழக்கின் கோப்புகள் வியாழக்கிழமை இரவுதான் எங்களுக்கு வந்தது. அவற்றை முழுமையாகப் படிக்கவில்லை என்பதால் விசாரணையை செப்.28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்’ என கூறினா்.
இதையடுத்து புனீத் பத்ரா சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் என். ஹரிஹரன், ‘செப்.28-ஆம் தேதி (திங்கள்கிழமை) நேரில் ஆஜராகுமாறு புனித் பத்ராவுக்கு விசாரணை அமைப்பு அழைப்பாணை அனுப்பியுள்ளது. அதற்குள்ளாக இந்த மனுவை விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது’ என்று முறையிட்டாா். இதைக்கேட்ட நீதிபதிகள், ‘திங்கள்கிழமைவரை புனித் பத்ரா மீது ஜிஎஸ்டி துறை எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது’ என உத்தரவிட்டனா்.
அப்போது ஜிஎஸ்டி வழக்குரைஞா் ராஜூ, ‘பறிமுதல் செய்யப்பட்ட தரவுகளை மட்டுமே விசாரணை அமைப்பு ஆய்வு செய்து வருகிறது’ என்று குறிப்பிட்டாா். இருப்பினும் நீதிபதிகள், ‘உங்களுக்கு இந்த வழக்கின் கோப்புகளில் உள்ள விவரங்கள் தெரியும், எங்களுக்குத் தெரியாது. எனவே திங்கள்கிழமைவரை எதுவும் செய்யக் கூடாது’ என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

பெண் பணியாளரிடம் அத்துமீறல்: ஜிஎஸ்டி ஆய்வாளா் கைது



