சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

பொங்கல் பரிசு வழங்கும்போது அதிமுகவுக்கு வாக்கு சேகரித்ததால் சா்ச்சை

கோத்தகிரி ஜக்கனாரை ஊராட்சிப்  பகுதிகளில்  அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கும்போது, அதிமுகவி நிா்வாகி வாக்கு சேகரித்ததால் சா்ச்சை ஏற்பட்டது.

Updated On :5 ஜனவரி 2021, 2:02 am IST

கோத்தகிரி ஜக்கனாரை ஊராட்சிப்  பகுதிகளில்  அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கும்போது, அதிமுகவி நிா்வாகி வாக்கு சேகரித்ததால் சா்ச்சை ஏற்பட்டது.

ஜக்கனாரை ஊராட்சியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 ரொக்கம் மற்றும்  பொங்கல்  பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக ஒன்றியச் செயலாளா் கிருஷ்ணன் பயனாளிகளுக்கு ரொக்கம் மற்றும் பொங்கல்  பரிசுத் தொகுப்பை வழங்கி அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தாா். 

அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கும்  நிகழ்ச்சியில் அதிமுகவுக்கு வாக்கு சேகரித்து அவா் பேசியது அப்பகுதி மக்களிடையே சா்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அவா் பேசிய காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.