ஆன்மிக, சமய இலக்கியக் கட்டுரைகள்
ஆன்மிக, சமய இலக்கியக் கட்டுரைகள்- எஸ்.சாய்ராமன்; பக். 200; ரூ. 100; பூங்கொடி பதிப்பகம், சென்னை-4; )044-2464 3074.


ஆன்மிக, சமய இலக்கியக் கட்டுரைகள்- எஸ்.சாய்ராமன்; பக். 200; ரூ. 100; பூங்கொடி பதிப்பகம், சென்னை-4; )044-2464 3074.
இந்நூலில் உள்ள "அருணகிரிப் புராணமும் அருணாசலப் புராணமும்' என்ற கட்டுரை, அருணாசல தல வரலாறு குறித்து சிறப்பாக விவரிக்கிறது. "வானவரும் வாசகரும்' என்ற கட்டுரையில் மாணிக்கவாசகருக்கும் சிவபெருமானுக்கும் இடையிலான உரையாடல் ரசிக்கும்படி உள்ளது.
அந்தந்தக் கால மக்களின் - நாட்டின் நாகரிகம், பண்பாடு, மரபு இவற்றையெல்லாம் இணைத்துக்கொண்டு வற்றாத நீரோட்டமாகப் பாய்ந்து இக்கால மக்களையும் வளப்படுத்துவதுதான் இலக்கியம். ஆதலின் "இலக்கியம்' காலத்தால் அழியாமல் என்றும் நிலை பெற்றிருக்கும் செல்வமாகும் என்று "புறநானூற்றில் ஓர் உண்மைப் பாடம்' என்கிற கட்டுரையில் இலக்கியத்துக்கு அருமையான விளக்கம் தரப்பட்டுள்ளது. மார்கழியின் மகிமை பற்றி மற்றொரு கட்டுரை எடுத்துரைக்கிறது. "தெய்வம் இகழேல்' என்னும் நன்மொழியைப் பொன்மொழியாகப் போற்றியவர் அருணகிரி. கணபதியைப் புகழுமிடத்தோ, சிவபிரானை தோத்திரம் சொல்லுமிடத்தோ, தேவியைச் சிறப்பிக்கும் இடத்தோ, திருமாலைப் போற்றுமிடத்தோ, அருணகிரி வாக்கின் அழகுக்கு இணையான பகுதி மேற்சொன்ன கடவுளரைத் தனிமுறையிற் போற்றும் நூல்களிடத்தும் காண்டலரிது என்று ஒரு கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆன்மிக, சமய இலக்கியவாதிகளுக்கு இனிமை தரக்கூடியது இந்நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...