பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 74.55 அடியாக உயர்ந்துள்ளது.வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!
/

திராவிட இயக்க வரலாற்றில் அன்பில்

திராவிட இயக்க வரலாற்றில் அன்பில் - செ.வீரபாண்டியன்: பக்.348; ரூ.200; செம்பியன் பதிப்பகம், திருச்சி-18; )0431-2764466. 

News image
Updated On :9 செப்டம்பர் 2025, 10:42 am IST

திராவிட இயக்க வரலாற்றில் அன்பில் - செ.வீரபாண்டியன்: பக்.348; ரூ.200; செம்பியன் பதிப்பகம், திருச்சி-18; )0431-2764466. 
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர், தி.மு.க தலைவர் கருணாநிதியின் நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவர் அன்பில் தர்மலிங்கம். அவருடைய தியாகம், மனிதநேயம், நெஞ்சுறுதி, போராட்ட வாழ்க்கை ஆகியவை இந்நூலில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
அவர் 1937-ஆம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் பெரியாரின் பேச்சை முதன் முதலாகக் கேட்டு தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் உறுப்பினரானது, முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றது, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது திருச்சி மாநகரில் நகர வளாக மைதானத்தில் நான்கு புறமும் காவலர்கள் அரண்போல் நின்று தடுக்க முயற்சித்தபோது அவர்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, கருப்புக் கொடியேற்றிவிட்டு மைதானத்தை விட்டு வெளியேறிய சம்பவம், அவர் நடத்திய சிறப்பு மிக்க மாநாடுகள் என நூலின் ஒவ்வோர் அத்தியாயமும் வியக்க வைக்கிறது.
குறிப்பாக திராவிட இயக்க வரலாற்றின் ஆணி வேராக விளங்கி வரும் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் அன்பையும், மதிப்பையும் பெற்று தான் பிறந்த அன்பில் கிராமத்துக்கும், திருச்சி மாவட்டத்துக்கும், தமிழகத்துக்கும் அன்பில் தர்மலிங்கம் பெருமை சேர்த்தது குறித்து தெளிவான நடையில் இந்நூல் விவரிக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.