/

தேவதாசிமுறை காலமும் கருத்தும்

தேவதாசிமுறை காலமும் கருத்தும் -  கல்யாணி பிரபாகரன்;  பக்.388; ரூ.400;  காவ்யா, சென்னை-24; )044 - 2372 6882.  

News image
Updated On :21 டிசம்பர் 2020, 3:26 am

DIN

தேவதாசிமுறை காலமும் கருத்தும் -  கல்யாணி பிரபாகரன்;  பக்.388; ரூ.400;  காவ்யா, சென்னை-24; )044 - 2372 6882. 
தேவதாசிகள் என்போர் கோயிலுக்கு நேர்ந்துவிடப்பட்ட பெண்களாவர்.  குறிப்பிட்ட சடங்கு முறைகள் மூலம் ஆலயத்தில் உறையும் கடவுளுக்கு மனைவியாக்கப்பட்டு, அதன் மூலம் கோயில் பணிகளில் ஈடுபட்டவர்கள்.  பல்லவர் ஆட்சிக்காலத்துக்கு முந்தையவனான கோச்செங்கணான் ஆட்சிக் காலத்தில் சிவ வழிபாட்டின்போது பாடலும், ஆடலும் அவசியமாக்கப்பட்டன;  பல்லவர்களின் ஆட்சிக் காலத்தில்தான் இசையும் நடனமும் இணைந்து மத இயல்புக் கூறு எனும் நிலைபாட்டுடன் சமயச் சடங்காகக் கோயிலில் நிலை பெற்றிருக்கிறது.  
தேவதாசிகள் தொடக்கத்தில் நடனம், இசையுடன் தொடர்புடையவராக இருந்தனர்.  பிற்காலத்தில் அந்நிலையில் மாற்றம் ஏற்பட்டு கோயிலைத் தூய்மைப்
படுத்தும் பணிகளான திரு அலகிடுதல், திருமெழுகிடுதல், கோயிலுக்கு வரும் நெல்லைக் குற்றி அரிசியாக்குதல், பூப்பறித்து தொடுத்தல் போன்ற பிற பணிகளையும் செய்யத் தொடங்கினர்.  இவ்வாறு  தேவதாசிகள் பலவகையாக கோயில் பணிகளுக்காகத் தங்களை அர்ப்
பணித்துக் கொண்டிருக்கிறார்கள்.    
பேரரசுகள்  தோன்றியபோது பெருங்கோயில் தோன்றின. பெருங்கோயில்கள் தோன்றியபோதுதான் தேவதாசி முறை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.  தேவதாசிகளுக்கு நிலங்கள் தானமாக அளிக்கப்பட்டு இருக்கின்றன.  பேரரசுகள் வீழ்ச்சி அடைந்ததும் தேவதாசி முறையும் வீழ்ச்சி அடைந்தது.  பல தேவதாசிகளின் வாழ்க்கை  நிலையும் தாழ்வடைந்தது.  
 டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் முன்முயற்சியின் காரணமாக 1927-ஆம் ஆண்டு  சென்னை மாகாண சட்டப்பேரவையில்  தேவதாசி ஒழிப்புச் சட்ட முன்
வரைவு முன்வைக்கப்பட்டது.  1947-ஆம் ஆண்டுதான் அது  நிறைவேற்றப்பட்டது.  இவ்வாறு தேவதாசி முறையின் தோற்றம், வளர்ச்சி,  வீழ்ச்சி என எல்லாவற்றையும் இந்நூல் மிகச் சிறப்பாக விளக்குகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.