தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

DIN

சைக்கோதெரபி - அசரியா செல்வராஜ்; பக்.360; ரூ.350; கண்ணதாசன் பதிப்பகம்; சென்னை - 600017; 044-24332682/8712.

உடலில் உயிர் இருக்கும்வரை உடல் நலனில் பாதிப்பு ஏற்படுவது இயல்பு. அதுபோலத்தான் மன நலப் பாதிப்பும். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருமே ஏதோ ஒருவகையில் குறையுள்ளவர்கள்தான் என்கிறது மருத்துவத் துறை. ஒருவரது மனநிலை,  பேச்சு,  நடத்தை முதலியன பிறருக்குத் தாங்கவொண்ணாத வேதனையைத் தொடர்ந்து அளிக்கும்பட்சத்தில் அவருக்கு மன நலச் சிகிச்சை தேவை.

மன நலச் சிகிச்சை குறித்த பல்வேறு அம்சங்களை 60 அத்தியாயங்களில் மிகவும் நுணுக்கமாக எளிய தமிழில் இந்த நூல் விளக்குகிறது. மருந்துகளைத் தவிர்த்து, மன நோயாளிகளுக்கு முறையான ஆலோசனை,  அன்பு,  ஆதரவு, அரவணைப்பு ஆகியவற்றை வழங்குவது சைக்கோதெரபியின் சிறப்பம்சம். இந்தச் சிகிச்சை முறையை மன நோய் மருத்துவர்களும் அறிந்துள்ளனர். ஆனால் பெருகிவரும் நோயாளிகளின் எண்ணிக்கை, மணிக்கணக்கில் நோயாளிகளுடன் மனம்விட்டு பேச வேண்டிய நிர்பந்தம் இருப்பதால் சைக்கோதெரபிஸ்டின் பங்கும் இந்தச் சிகிச்சையில் முக்கியத்துவம் பெறுகிறது.

ஒரு மனநோய் மருத்துவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் சைக்கோதெரபி சிகிச்சை அளிக்கப்படுவதுதான் முறையானது என இந்த நூல் குறிப்பிடுகிறது.

மூளைக்குள் இருக்கும் சூட்சுமப் பகுதியான மனதின் பல்வேறு பரிமாணங்களையும் அதில் ஏற்படும் பாதிப்பு, தீர்வுகளையும் பதிவு செய்திருப்பது  இந்த நூலின் சிறப்பு. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.