ஆன்மிக அரசியல் - ரங்கராஜ் பாண்டே; பக். 160; ரூ. 200; கிழக்கு பதிப்பகம், சென்னை - 14; 044 - 4200 9603.
ஆலயங்களிலிருந்து பணத்தைப் பெறும் அரசு, ஆலயங்களின் மேம்பாட்டுக்காக ஏதாவது செய்திருக்கிறதா என்ற கேள்வியை முன்வைக்கும் 'இந்து அறநிலையத்துறை' எனும் கட்டுரையில் தொடங்கி, சைவ - வைணவ ஆகமங்கள் குறித்து விளக்கும் 'ஆகமங்கள் ஆண்டவன் அருளியவை', இறைவனை அர்ச்சனை செய்ய உகந்த மொழி வடமொழியே, போற்றிப் பாடுவதற்கு ஏற்ற மொழி தமிழ்மொழியே என வலியுறுத்தும் 'ஆகமங்களை எதிர்ப்பது ஆண்டவனை எதிர்ப்பதாகும்', மாற்று மதத்தவரின் படையெடுப்பைவிட மோசமானது இந்து அறநிலையத்துறையின் செயல்பாடுகள் என்பதைத் தரவுகளோடு விளக்கும் "அறநிலையத்துறையே ஆலயங்களில் இருந்து வெளியேறு' உள்ளிட்ட 11 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
கோயில், ஹிந்து மதம், வழிபாட்டு முறைகள், கோயில்களுக்கும் அரசுக்குமான உறவு ஆகியவை குறித்த கருத்துகள் நிறைந்துள்ளன. குறிப்பாக, 'சைவ ஆகமங்களில் கோயில் நிர்வாகம்' என்கிற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்ற தீபா துரைசாமி, சைவ அறிஞரான குளித்தலை ராமலிங்கம் ஆகியோருடன் நூலாசிரியர் மேற்கொண்ட நேர்காணல், 'கோயிலில் நாத்திகருக்கு என்ன வேலை' என்று கேள்வியெழுப்பும் நேர்காணல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் சாய் தீபக்கின் நேர்காணலில் 1850-களிலேயே ஆங்கிலேயர்கள் ஆலயங்களின் சொத்துகளை சுரண்டுவதற்கான வழிமுறைகளை ஆராய ஆரம்பித்து விட்டனர் என்று குறிப்பிடுவதோடு, எப்படியெல்லாம் சொத்துகள் மடைமாற்றம் செய்யப்பட்டன என்பதை சிறப்பாக விளக்கியுள்ளார்.
ஹிந்து தர்மம், கோயில்கள் குறித்தும், சிக்கலான காலகட்டத்தில் இருப்பது குறித்தும் புரிந்துகொள்வதற்கு இந்நூல் உதவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயா் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

அன்ன காமாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா

சந்தானம் நடிக்கும் புதிய படம்!

டாடா இயக்குநர் தயாரிப்பில்..! கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ப்ளடி பாலிடிக்ஸ் பட டீசர்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

