முஹம்மது: பேரன்பும் பெருங்கோபமும் - பைம்பொழில் மீரான், பக். 280, ரூ. 250, ஹார்ஸ்சென்ஸ் மீடியா நெட்வொர்க், 27, பகிருதீன் ஷாகிப் தெரு, பெரம்பூர், சென்னை -11.
நபிகள் நாயகம் முஹம்மது பற்றி ஆங்கிலத்தில் (முஸ்லிம் அல்லாதவர்களாலும் எழுதப்பட்ட) பல விரிவான அறிமுக - ஆய்வு நூல்கள் கிடைக்கின்றன. தமிழில் குறைவு. இதன்வழியில் முஸ்லிம் ஒருவரால் எழுதப்பட்டதெனினும் இஸ்லாமியர் அல்லாதோரும் நபிகள் வாழ்க்கையை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் எழுதப்பட்டுள்ளது.
அவரை இன்றும் இவ்வுலகம் ஏதோ ஒருவகையில் அறிய, புரிந்துகொள்ள முயற்சிகள் நடக்கின்றன. அவருடைய பேரன்புக்கான காரண காரியங்களை விளக்குவதுடன், பெருங்கோபம் கொண்ட தருணங்களின் பின்னணிகளையும் தக்க வகையில் புரிந்துகொள்ளுமாறு நூல் நெடுகிலும் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.
அரபு தேசம், வாழ்க்கை, இஸ்லாம், போர்க்களங்கள், இல்லத்தரசிகள், பொன்மொழிகள் என ஆறு அத்தியாயங்களில் நபிகளின் பரந்த வாழ்வின் துளிகளைப் பதிவு செய்துள்ளார். அரபுதேசத்தில் அன்றைய பின்புலத்தைக் குறிப்பிடும் ஆசிரியர், வாழ்க்கை என்ற நூலின் பெரும் அத்தியாயத்தில் நபிகள் நாயகத்தின் வாழ்வுடன் சிறப்பிக்கத்தக்க அவருடைய பழக்க வழக்கங்களையும் விவரிக்கிறார். பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் தரக் கூடிய தகவல்கள் இஸ்லாம் பகுதியில் இடம் பெற்றிருக்கின்றன.
ஆங்காங்கே நபிகள் நாயகத்தின் தலைசிறந்த பொன்மொழிகள் கட்டமிட்டுத் தரப்பட்டிருக்கும், மிகப் பழைமையான நூல்களில் காணப்படும் பாணி, இந்த நூலுக்கு மிகச் சிறப்பு. பல்வேறு விஷயங்களையும் புரிந்துகொள்ள உதவும் அழகிய நூல். எளிய மொழியில் கோர்வையாக எழுதப்பட்டிருப்பது தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அழகிய வரவு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயா் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

அன்ன காமாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா

சந்தானம் நடிக்கும் புதிய படம்!

டாடா இயக்குநர் தயாரிப்பில்..! கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ப்ளடி பாலிடிக்ஸ் பட டீசர்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

