தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

DIN

மனித குமாரன் இயேசு - கலீல் ஜிப்ரான் (தமிழில்- சிற்பி பாலசுப்பிரமணியம்);  பக். 240; ரூ.250; அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு நிறுவனம்,  உடுமலை சாலை, பொள்ளாச்சி-642003.

யூதராகப் பிறந்தாலும் சாதாரண மனிதர்களுக்கு எதிராக கடைப்பிடிக்கப்பட்ட பழக்க வழக்கங்கள், மதச் சடங்குகள் உள்ளிட்டவற்றுக்கு எதிராகவும்,  அதை கண்மூடித்தனமாக ஆதரித்த போதகர்களுக்கு எதிராகவும் புரட்சி செய்தவர் இயேசு கிறிஸ்து.  அதை  ஒவ்வொரு கதையிலும் சொல்லாமல் சொல்கிறது இந்த நூல்.  உதாரணமாக,   பாலியல் தொழிலாளியான  மகதலேனா  மரியாள்   பேச  விரும்பிய போதும்,  அவரை  காதல்  செய்ய  விரும்பிய போதும் இயேசு அதைத்  தவிர்க்கவும்  இல்லை,  தட்டியும் கழிக்கவில்லை.

அதேபோல,   தனது இளம்பருவத்தில் சிறிது காலம் இந்தியாவில் வந்து புரோகிதர்களிடம் உடலின் உள்புறங்கள் குறித்து கற்றறிந்தார் என கூறுகிறார்  நூலாசிரியர். இது ஆய்வுக்குரியது என்றாலும்  இயேசு கிறிஸ்து பிறக்கும்போது அவரை காணச் சென்ற சாஸ்திரிகள் இந்தியர்கள் என்பதும்,   இளம் பருவத்தில் இந்தியாவுக்கு இயேசு வந்திருக்கிறார் என்பதையும் பறைசாற்றுகிறது இந்நூல்.

விவிலியத்தில்  புதிய  ஏற்பாடு பகுதியை படித்துவிட்டு   இந்நூலை படிக்கும்போது,  இது இயேசுவின் மறுபக்கம், உள்பக்கம் என அகம், புறத்தை முழுமையாக தெரிந்துகொள்ள  உதவும்   காலக்கண்ணாடியாக  வாசகர்களுக்கு உதவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.