தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

DIN

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - கே. ஜீவபாரதி; பக். 256; ரூ. 260;  ஜீவா பதிப்பகம், சென்னை- 17; 9952079787. 

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கை வரலாற்றை ஒரு நாவலைப் போல சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் தந்திருக்கிறார் நூலாசிரியர். 

பாரதிதாசனிடம்  உதவியாளராகச் சிறிது காலம் இருந்ததுடன், ஒவ்வொரு பாடலையுமே 'பாரதிதாசன் வாழ்க'  என்றெழுதித் தொடங்கும் பட்டுக்கோட்டையின் திருமணமும் அவர் தலைமையில்தான் நடைபெற்றது.

'தேனாறு பாயுது செங்கதிர் சாயுது ஆனாலும் மக்கள் வயிறு காயுது' என்ற பாடல் வரிகள் எவ்வாறு பெரும் திறப்பை ஏற்படுத்திக் கொடுத்தது  என்று குறிப்பிட்டுள்ள ஆசிரியர், பாரதிக்குப் பின் ரஷியப் புரட்சி பற்றி எழுதிய கவிஞரின் மிகச் சிறந்த பாடலையும் அப்படியே தந்துள்ளார்.

பட்டுக்கோட்டையின் புகழ்பெற்ற பல பாடல்கள் - சின்னச் சின்ன இழை பின்னிப்பின்னி வரும்... காதலிலே தோல்வியுற்றாள் கன்னியொருத்தி... - எத்தகைய சூழலில் எழுதப்பட்டன என்று பாடல்கள் பிறந்த கதை என்ற தலைப்பில் விவரிக்கப்பட்டுள்ளது.

கல்யாணசுந்தரத்தின் வாழ்வில் உதவிய ஆளுமைகளையெல்லாம் பதிவு செய்துள்ள நூலாசிரியர், எம்ஜிஆரின் அரசியல் வாழ்விலும் வெற்றியிலும் பட்டுக்கோட்டையின் பாடல்களுக்கு எத்தகைய இடமிருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

வெறும் 29 வயதிலேயே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் முடிவு நேரிட்டுவிடுகிறது. பட்டுக்கோட்டை மறைந்தபோது கண்ணதாசன் எழுதிய இரங்கல் கட்டுரையும், கவிதையும், காலத்தால் அழியாதவை. பாரதி, புதுமைப்பித்தன் என அற்பாயுளில் இழந்த  ஆளுமைகளின் வரிசையில் இடம்பெற்றுவிட்டாலும் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய விரிவான சித்திரத்தை  அறிமுகப்படுத்துகிறது இந்த நூல்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.