மாயத்தீவினிலே (நாவல்) - முனைவர் ரா. மனோகரன்; பக். 456; ரூ.500. காவ்யா பதிப்பகம், சென்னை-24; 044-2372 6882.
மாயத்தீவினிலே நாவல் பழங்குடியினர் பண்பாட்டை விளக்கும் ஆவணமாகவும், பழந்தமிழ் இனத்தின் பெருமையைப் பறைசாற்றும் கருத்தியலாகவும் அமைந்துள்ளது. இது கற்பனைத் தீவுகளைப் பற்றிய கதையாக தோன்றினாலும், இது ஒரு பழங்குடித் தீவில் நிகழ்ந்த உண்மைக் கதையை மையமாகக் கொண்டுள்ளது.
கதையின் நடுவே பழங்குடியினரைப் பற்றிய விவரங்கள் தரும்போது குமரிக் கண்டத்திலிருந்து விலகிச் சென்ற நிலப்பரப்புகள், இனங்கள், மொழிகள், வாழ்வியல் முறைகள். வழிபாட்டு முறைகள், சடங்கு முறைகள் போன்றவற்றையும் காட்டியுள்ளார் நூலாசிரியர்.
தமிழ் மொழி, தமிழினம், குமரிக் கண்டத்தின் கீழ் இருந்த 49 நாடுகள் பற்றி காடன் என்ற கதாபாத்திரம் கூறுவது போல் ஆசிரியர் வடிவமைத்துள்ளார். கச்சி முதல் மருதன், காடன், கொம்பன், தொந்தி, குப்பன் போன்ற கதாபாத்திரங்கள் நாவல் முழுக்க வியாபித்துள்ளார்கள். இவர்களுக்கு நடுவே நிழலாடும் கதைதான் மாயத்தீவினிலே!
இன்றும் இயற்கையோடு வாழும் பழங்குடியினரின் வாழ்க்கை முறைகள் நூலைப் படிக்கும்போது வியப்புறவே செய்கின்றன.
நாவலாக இல்லாமல், பழங்குடியினரின் நிலையையும் அறிய உதவும் நூல் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பெட்ரோலுக்காக குவியும் வாகனங்கள்! போர்ப் பதற்றத்தால் எரிபொருள் நிரப்ப வரிசை கட்டிய மக்கள்!
பிரபலம் என்பது யார்? விஜய்யைச் சொல்கிறாரா? - கிருத்திகா உதயநிதியின் பதிவு வைரல்!

நைஜீரியாவில் தொடரும் அவலம்! ஒரே நாளில் பெண்கள், குழந்தைகள் உள்பட 300 பேர் கடத்தல்!

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

