கடன் - தீதும் நன்றும் - சோம.வள்ளியப்பன்; பக். 224; ரூ.250; கிழக்கு பதிப்பகம், சென்னை- 14; 044-42009603.
கடன் நல்லதா - கெட்டதா? ஹீரோவா - வில்லனா? என்ற அடிப்படை கேள்வியுடன் தொடங்குகிறார் நூலாசிரியர். தனி நபர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள கடன் பெற வேண்டியிருக்கிறது. நிறுவனங்களைப் பொருத்தவரையில், தொழிலைப் பெருக்கிக் கொள்ள எப்போதுமே சொந்தப் பணம் இருந்துவிடுவதில்லை. அதனால் கடன் பெற வேண்டியிருக்கிறது. இவ்வளவு ஏன், வரி மூலமாக கிடைத்து வரும் வருவாய் போதவில்லையென்றால் அரசுகளே கடன் வாங்கித்தான் செலவை சமாளிக்கின்றன.
கடன்தான் நிறுவனத்தின் முக்கிய பங்கு: தனி நபர் வளர்ச்சிக்கும் தொழில் வளர்ச்சிக்கும் கடன் வாங்குவதை புத்திசாலித்தனம் என்கிறார் இவர்.
நாடுகளின் கடன், பல விதமான இரவல் தொகை குறித்த விளக்கங்களைப் பற்றி நூல் பேசினாலும், பொதுவாக நடுத்தர வர்க்க மனிதரின் பணப் பிரச்னைகள், தனி நபர் கடன், பண விஷயத்தில் ஒழுக்கம் பற்றிய சிந்தனைதான் இதன் அடிப்படை.
கடன் வாங்கி ஆடம்பரத்தில் தொலைப்பதற்கு எதிராக நூல் தொடர்ந்து எச்சரிக்கிறது. தன்னிடம் இல்லாத பணத்தை, கடனாகப் பெற்று வசதிகளை அதிகரித்துக் கொள்வது ஆபத்தை வரவழைத்துக் கொள்வது போலத்தான்.
எதிர்பாராத செலவுகளுக்கு முன்கூட்டியே சேமித்து, சரியாக முதலீடு செய்து வருகிறவர்கள் கடன்களிலிருந்து தப்பிக்கிறார்கள். கல்வி, குடியிருக்க வீடு, மருத்துவச் செலவு ஆகியவை தவிர அநேகமாக மற்ற அனைத்துத் தேவைகளையும் குறைத்துக் கொள்ள அல்லது தவிர்க்க முடியும் என்று அக்கறையுடன் சொல்லித் தருகிறார். பணத்தின் மீது அக்கறையுள்ளவர்களுக்கு பயனுள்ள நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பெட்ரோலுக்காக குவியும் வாகனங்கள்! போர்ப் பதற்றத்தால் எரிபொருள் நிரப்ப வரிசை கட்டிய மக்கள்!
பிரபலம் என்பது யார்? விஜய்யைச் சொல்கிறாரா? - கிருத்திகா உதயநிதியின் பதிவு வைரல்!

நைஜீரியாவில் தொடரும் அவலம்! ஒரே நாளில் பெண்கள், குழந்தைகள் உள்பட 300 பேர் கடத்தல்!

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

