மனதோடு ஒரு சிட்டிங் - சோம.வள்ளியப்பன்; பக். 152; ரூ.175; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; 044-4200 9603.
பொருளாதாரம், பங்குச்சந்தை உள்பட பல்வேறு துறைகளில் புகழ்பெற்ற நூலாசிரியர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் "எமோசனல் இன்டலிஜென்ட்' என்ற பிரிவில் முனைவர் பட்டத்துக்காக மேற்கொண்ட ஆய்வறிக்கையே நூலாக வெளியிட்டுள்ளார்.
மனதின் ஓட்டத்தை ஆராய்ந்து, அங்கே என்ன நடக்கிறது என்பதையே விவரிக்கிறது இந்த நூல். 27 தலைப்புகளில் ஒவ்வொரு பக்கத்திலும் பல கருத்துகள் இருக்கின்றன. ஒருநாளைக்கு 16 மணி நேரம் விழித்திருக்கிறோம். ஆனால், நம் மனதில் பல ஆயிரம் எண்ணங்கள் தோன்றி மறைகின்றன என்கிறார். விநாடிக்கு விநாடி எண்ணங்கள் தோன்று மறைகின்றன.
அன்றாட வாழ்வில் நம் மனதைப் பாதிக்கும், மன உளைச்சலுக்கு ஆளாகும் விஷயங்களையே நூலாக வெளியிட்டுள்ளாரோ என்றே ஒவ்வொரு கட்டுரையையும் படிக்கும்போது, நினைக்கத் தோன்றுகிறது.
தேவையற்ற மனக் குழப்பங்களையும், எண்ணங்களையும் தூக்கி எறிந்துவிட்டு, நல்ல விஷயங்களையே நினைத்து, வெற்றியாளராக வழியைத் தேடி வேண்டும் என்ற ஒரே மையக் கருத்து படித்து முடித்தவுடன் எழுதுகிறது.
நூலாசிரியர் தனது மனதில் தோன்றியதைத் தான் எழுதியிருக்கிறேன் என்று சொன்னாலும், ஒவ்வொருவரும் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளையே ஒட்டுமொத்தமாகத் தொகுத்துவிட்டார் போலும்.
யதார்த்தமான வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு கவலையையும் மனக் குழப்பத்தையும் விட்டொழிதலே என்கிறார் நூலாசிரியர். படித்து பாதுகாக்க வேண்டிய நூல் மட்டுமல்ல; பிறருக்குப் பரிசளிக்க வேண்டிய நூல் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயா் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

அன்ன காமாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா

சந்தானம் நடிக்கும் புதிய படம்!

டாடா இயக்குநர் தயாரிப்பில்..! கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ப்ளடி பாலிடிக்ஸ் பட டீசர்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

