நானும் வந்தேன் ஒரு சித்தன் - இரவீந்திர பாரதி; பக்.110; ரூ.110, மாரிராஜம் வெளியீடு, அரூர்- 636903, (தருமபுரி மாவட்டம்); 94421 58086.
பாரதியார் மறைந்து நூற்றாண்டு ஆகியும் அவர் மீது தவறான குற்றச்சாட்டுகளும், அவதூறுகளும் இன்றும் தொடர்கின்றன. பாரதியை உலகமே கொண்டாடி வரும் நிலையில் அவர் பிறந்த தமிழ் மண்ணில் ஒரு சிலர் அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.
புதிதாக வாசிப்பில் நுழையும் இளைய தலைமுறையினர் இந்த அவதூறுகளை உண்மை என நம்பி மயங்கிவிட வாய்ப்பிருக்கிறது. எனவே பாரதியின் மீதான நாணயமற்ற, நேர்மையற்ற குற்றச்சாட்டுகள் குறித்தும், இவை எவ்வாறு உண்மைக்கு மாறாக திரிக்கப்படுகின்றன என்பது குறித்தும் "நானும் வந்தேன் ஒரு சித்தன்' நூல் மூலமாக தனது கருத்துகளை அழுத்தமாக பதிவு செய்கிறார் நூலாசிரியர் இரவீந்திரபாரதி.
பாரதி பக்திக் கவியா?, பாரதியின் தத்துவப் பார்வை, பெண்மை வாழ்க, குயில்பாட்டு- ஒரு புதிய பார்வை ஆகியவை உள்ளிட்ட ஒன்பது அத்தியாயங்களில் பாரதியார் சமூகத்துக்கு ஆற்றிய பங்களிப்பு, தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்டது, சாதி ஒழிப்புக்காக தனது எழுத்துகளை துணையாக கொண்டு போராடியது என பல்வேறு தகவல்களை உரிய மேற்கோள்கள், கவிதைகள், நிகழ்வுகள் மூலம் சொல்லப்பட்டிருப்பது வாசகர்களை நிச்சயம் ஈர்க்கும்.
பாரதியைப் பற்றி எண்ணற்ற புத்தகங்கள் இருக்கும் நிலையில், புதிய முயற்சியில் இந்த நூல் இருக்கிறது. பாரதியை நேசிப்பவர்கள் மட்டுமின்றி, தமிழ் ஆர்வலர்கள் அவசியம் படித்து அறிய வேண்டிய செய்திகள் நிறைய உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயா் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

அன்ன காமாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா

சந்தானம் நடிக்கும் புதிய படம்!

டாடா இயக்குநர் தயாரிப்பில்..! கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ப்ளடி பாலிடிக்ஸ் பட டீசர்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

