இந்தியா 75 (போர்முனை முதல் ஏர்முனை வரை) - மயில்சாமி அண்ணாதுரை, வி.டில்லிபாபு; பக். 144; ரூ.180; திசையெட்டு பதிப்பகம், சென்னை-39; 044-2597 6458.
'சந்திரயான், மங்கள்யான்' செயற்கைக்கோள் திட்டங்களால் அறியப்பட்டவர் மயில்சாமி அண்ணாதுரை. அறிவியல் நூல்கள் பலவற்றை தமிழில் எழுதியுள்ளார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு போர் விமான என்ஜின் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இருவரும் இணைந்து எழுதிய அறிவியல் தமிழ் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் வெவ்வேறு இதழ்களிலும் வெளியானவை.
இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்பங்கள், பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள், இவ்விரண்டால் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ள நன்மைகள், இளம் தலைமுறையினருக்கு உருவாகியுள்ள எதிர்கால வாய்ப்புகள் பற்றி 8 தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
கலாமின் இந்தியா 2020- ஓர் கனவா என்பது குறித்த ஓர் சிறப்புப் பார்வையும், 2030-க்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பது குறித்த அறிவியல் மாணவர்களுக்கான கட்டுரையும் உத்வேகத்தை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது.
அறிவியல் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்களிப்பு என்பது அதிசயப்பட வைக்கிறது. பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க, தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்துவதே தீர்வு என்பது சரியானதுதான். கரோனாவால் உலகமே பாதிக்கப்பட்ட நிலையில், டி.ஆர்.டி.ஓ.வும் களமாடிவருவதும், சாதனை படைத்துவருவதும் தொழில் துறைக்கு ஓர் முன்னேற்றமே!
அறிவியல் படிக்கும் மாணவர்கள் படிக்க வேண்டிய அற்புத நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயா் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

அன்ன காமாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா

சந்தானம் நடிக்கும் புதிய படம்!

டாடா இயக்குநர் தயாரிப்பில்..! கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ப்ளடி பாலிடிக்ஸ் பட டீசர்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

